“‘ஜனநாயகன்’ படக்குழுவின் உழைப்பை மதியுங்கள்!” – சூர்யா |”Respect the hard work of the ‘Jananayagan’ film crew!” — Suriya

நடிகர் சிரஞ்சீவி, “‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்திருப்பது என்னை ஆழமாகக் கவலைப்படுத்துகிறது.

சினிமா என்பது நம்பிக்கை, உழைப்பு மற்றும் பலரின் கூட்டுக் கனவுகளால் உருவாக்கப்படுகிறது.

இத்தகைய சம்பவங்கள் தொழில்துறையில் உள்ள அனைவரையும் பாதிக்கின்றன. உழைப்பைப் பாதுகாப்பது எவ்வளவு முக்கியம் என்பதை இது நினைவூட்டுகிறது.

சினிமாவை மதிக்கவும் பாதுகாக்கவும் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். பைரசியை ஒழியுங்கள். சினிமாவைக் காப்பாற்றுங்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

‘ஜனநாயகன்’ படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்திருப்பது பற்றி நடிகர் சூர்யா, “ஒரு முழு குழுவினரின் ஆர்வமும், உழைப்பும் இப்படி ஆக்கப்பட்டிருப்பது மனதை உடைக்கும் வகையிலும், நியாயமற்றதாகவும் இருக்கிறது.

நான் உங்களிடம் உண்மையுடன் கேட்டுக்கொள்கிறேன், தயவுசெய்து இந்தப் படத்தை இங்கே பார்க்காதீர்கள், பகிர்ந்துகொள்ளாதீர்கள், அல்லது விவாதிக்காதீர்கள்.

அவர்களின் உழைப்பை மதியுங்கள். நான் என் நண்பர்களுடன் நிற்கிறேன். இந்தச் செயலைக் கண்டிக்கிறேன், இது மன்னிக்க முடியாதது” எனப் பதிவிட்டிருக்கிறார்.

Source link