ஜனநாயகன் ரிலீஸில் விஜய்ணாவுக்கு ஒரேயொரு வருத்தம் தான்: ரசிகர்களுக்கும் அதே வருத்தமே – jananayagan vijay worries about kutty nanba, nanbis

ஜனநாயகன் ஏ சான்று: குழந்தை நட்சத்திரமாக விஜய்யை திரையுலகிற்கு அழைத்து வந்து, பின்னர் ஹீரோவாக்கி அழகு பார்த்தார் எஸ்.ஏ.சந்திரசேகர். இந்நிலையில் கெரியர் நன்றாக சென்றபோதே நான் அரசியலுக்கு செல்கிறேன் என நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு கிளம்பினார் விஜய்.

அவர் முழு நேர அரசியலுக்கு செல்லும் முன்பு நடித்த கடைசி படமான ஜனநாயகன் ஜனவரி மாதம் ரிலீஸாகும் என்று அறிவித்து பின்னர் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் 7 மாதங்கள் கழித்து நாளை மறுநாள் ஒரு வழியாக ஜனநாயகன் படத்தை தியேட்டர்களில் பார்க்கலாம். ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப் போனதே சென்சார் சான்றிதழால் தான். அப்படி இருக்கும்போது விஜய் படத்திற்கு ஏ சான்று கிடைத்தது.

வினோத் தகவல்: அய்யய்யோ ஏ சான்று கொடுத்தால் விஜய்யின் குட்டீஸ் ரசிகர்கள் யாரும் தியேட்டருக்கு வர முடியாதே என்பதே பலரின் யோசனையாக இருந்தது. விஜய் மாமா படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்கவே குட்டீஸ்கள் வந்துவிடுவார்கள். அப்படி இருக்கும்போது ஏ சான்றால் நீங்கள் யாரும் தியேட்டருக்கு வர முடியாது என்று சொல்லியிருப்பது அவர்களை ஏமாற்றம் அடை செய்திருக்கிறது.

பிள்ளைகளை விட்டுவிட்டு நாம் மட்டும் போய் படம் பார்ப்பதா என பெற்றோரும் வருத்தப்படுகிறார்கள். ஆனால் இந்த வருத்தம் அவர்களுக்கு மட்டும் அல்ல விஜய்க்கும் தான் இருக்கிறது. ஜனநாயகன் சென்சார் முடிந்து ஏ சான்று வந்ததும் எனக்கு மட்டும் இல்லை விஜய் சார், தயாரிப்பாளரும் கவலை அடைந்தார்கள். குட்டி ரசிகர்களால் படம் பார்க்க முடியாதே என்கிற வருத்தம் தான் என கூறியிருக்கிறார் வினோத்.

விஜய்யின் கடைசி படத்தை பிள்ளைகளுடன் குடும்பமாக சென்று தியேட்டரில் பார்க்க ஆசைப்பட்டு காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எங்களை வீட்டில் விட்டுட்டு நீங்கள் மட்டும் விஜய் மாமா படம் பார்க்கப் போகிறீர்களா என குட்டீஸ்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் இருக்கிறார்கள் தளபதி ரசிகர்கள்.

லீக்கானாலும் தியேட்டருக்கு போங்க: ஜனநாயகன் தான் ஆன்லைனில் வந்துவிட்டதே இதை போய் ஏன் தியேட்டரில் பார்க்க வேண்டும் என கேட்பவர்களும் உண்டு. இதில் சமூகத்திற்கு தேவையான விஷயங்களை சொல்லியிருக்கிறோம். விஜய் சாருக்காக படத்தை தியேட்டரில் பார்க்க வேண்டும். கசிந்த படத்தை பார்த்திருந்தாலும் தியேட்டரில் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்கிறார் ஹெச். வினோத்.

ஜனநாயகன் பட ரிலீஸில் பிரச்சனை ஏற்பட்டபோது இரண்டு முறை துக்கம் தாங்க முடியாமல் அழுதிருக்கிறார் அவர். இந்நிலையில் சமூகத்தில் பொய்கள் அதிகமாகிவிட்டதாகவும், ஒரு பொய்யை சமாளிக்க இன்னொரு பொய் சொல்ல வேண்டியதாக இருக்கிறது என வினோத் தெரிவித்தது வைரலாகிவிட்டது. மனிதர் ஏதோ பெரிய வருத்தத்தில் இருக்கிறார் போன்று. அதனால் தான் போட்டு உடைத்துவிட்டார் என சினிமா ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
தளபதியன்ஸ் கவலை: பகவந்த் கேசரியை இயக்கிய அனில் ரவிபுடியே அதை தமிழில் ரீமேக் செய்ய விரும்பினார் விஜய். ஆனால் அனில் நோ சொல்லிவிட்டதால் அஜித் குமாருக்காக பிங்க் படத்தை ரீமேக் செய்த வினோத்தை வைத்து தன் படத்தை எடுக்க வைத்திருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்

இதற்கிடையே விஜய் படம் வருகிறதே என்கிற சந்தோஷம் இருந்தாலும், அவரை கடைசியாக பார்க்கப் போகிறோம் என்பதை தான் தாங்க முடியவில்லை என்கிறார்கள் தீவிர ரசிகர்கள். இது ஒரு பக்கம் இருக்க, தவெகவில் தனுஷை சேர்க்க முயற்சி செய்து வருகிறார் முதல்வர் விஜய் என பேசப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Source link