'ஜனநாயகன்' வெளியானதில் அமித் ஷா பங்கு: காங்., புகார்

சாத்துார்: ” ஜனநாயகன் திரைப் படம் சட்டவிரோதமாக வெளியானதில் மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு பங்கு உள்ளது” என காங்., – எம்.பி., மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

சாத்துாரில் அவர் கூறியதாவது:

ஜனநாயகன் திரைப்படம் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியான விவகாரம், இந்திய திரைத்துறையை ஆட்டி வைக்கும் செயல்.

த.வெ.க., தலைவர் விஜயின் செயல்பாடுகளை நிலைகுலைய செய்யவும், மிரட்டல் விடுக்கவும் நிகழ்த்தப்பட்ட இந்த செயலில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பங்கு உள்ளது. ஒட்டுமொத்த சினிமா துறையையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க அமித் ஷா நினைக்கிறார்.

பா.ஜ., சித்தாந்தத்திற்கு எதிராக யாரும் திரைப்படம் எடுக்க கூடாது என்பதற்காகவே இதை செய்துள்ளனர். ஜனநாயகன் திரைப்படத்தை, 50 லட்சம் பேர் பார்த்துள்ளனர். தமிழக அரசியலில் குழப்பத்தை உருவாக்குவதே பா.ஜ., நோக்கம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link