ஜனவரியில் உயர்ந்தது வேலையின்மை

புதுடில்லி:கடந்த ஜனவரியில் வேலைவாய்ப்பின்மை விகிதம் சிறிது உயர்ந்து, 5 சதவீதமாக உள்ளது.

இது குறித்து, தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட தரவுகள்:

நாடு முழுதும் கடந்த 2025 டிசம்பரில், 15 வயதுக்கு மேற்பட்டோரிடையே வேலைவாய்ப்பின்மை விகிதம் 4.80 சதவீதமாக இருந்தது. இது, கடந்த ஜனவரியில் சற்று உயர்ந்து 5 சதவீதமாக உள்ளது.

குளிர்காலத்தில் கட்டுமானம், வேளாண்மை தொடர்பான பணிகள், போக்குவரத்து போன்ற நடவடிக்கைகள் மந்தமடைவதால், கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை உயர்ந்தது; நகர்ப்புறங்களில் நிலைமை ஓரளவு சீராக இருந்தது.

கடந்த 2025 டிசம்பருடன் ஒப்பிடுகையில், கடந்த ஜனவரி மாதம் வேலைவாய்ப்பின்மை கிராமப்புறங்களில் 3.90 சதவீதத்திலிருந்து 4.20 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 6.70 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Source link