ஜன நாயகன் கசிவு – நடிகர்கள் சிரஞ்சீவி, ஜிவி பிரகாஷ், குஷ்பு ஆதங்கம்

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமான ‘ஜன நாயகன்’, திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே இணையதளங்களில் கசிந்ததால் படக்குழுவினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சீரஞ்சீவி, ஜி.வி.பிரகாஷ், நடிகை குஷ்பு ஆகியோர் கவலை தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நடிகர் சிரஞ்சவீ,

“இது போன்ற செயல்கள் ஒட்டுமொத்தத் திரைத்துறையையும் பாதிக்கும். சினிமா என்பது பலரின் நம்பிக்கை, கடின உழைப்பு மற்றும் கூட்டு கனவுகளால் உருவாவது. ஒரு படத்தின் கசிவு, அப்படத்திற்காக உழைத்தவர்களின் உழைப்பை அவமதிக்கும் செயலாகும்.

ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் படைப்பாளிகளின் உழைப்பை மதித்து, திருட்டுத்தனமாகப் படம் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். “திரைத்துறையைக் காப்போம், பைரஸியை ஒழிப்போம்” என்று கூறியுள்ளார்.

நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்,

திரைத்திருட்டை ஆதரிக்காதீர்கள். திறமையையும் கடின உழைப்பையும் மதியுங்கள். ஒரு திரைப்படத்தை உருவாக்குவதற்கு ஏகப்பட்ட ரத்தமும் வியர்வையும் சிந்தப்படுகிறது. வேதனைக்குரியது. என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகை குஷ்பு,

திருட்டுப்பிரதி என்பது பொழுதுபோக்கு அல்ல. அது ஒரு திட்டமிட்ட திருட்டு. அதில் ஈடுபடுபவர்கள், எந்தக் குற்றவாளிக்கும் சற்றும் குறைந்தவர்கள் அல்ல. மற்ற குற்றங்களைப் போலவே அவர்களும் நடத்தப்பட வேண்டும்.

ஜனநாயகன் கசிவு என்பது, அர்த்தமுள்ள ஒன்றை உருவாக்குவதற்காகத் தங்கள் இரத்தம், வியர்வை மற்றும் பல ஆண்டுகளைச் செலவழித்த ஒவ்வொரு கலைஞர், தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் தொழிலாளிக்கும் இழைக்கப்பட்ட ஒரு கொடூரமான துரோகம். ஒரே ஒரு சட்டவிரோத கிளிக் வாழ்வாதாரங்களை அழிக்கிறது, கனவுகளை நசுக்குகிறது, மேலும் ஒரு முழுத் தொழில்துறையையே முடக்குகிறது.

இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இதில் நியாயப்படுத்துவதற்கு எதுவும் இல்லை. நீங்கள் சினிமாவை உண்மையாக மதித்தால், திருட்டுப்பிரதியை மறுப்பீர்கள். அவ்வளவுதான்.

படைப்பாளிகளுடன் நில்லுங்கள். நேர்மையுடன் நில்லுங்கள். கடின உழைப்புடன் நில்லுங்கள். பொழுதுபோக்குத் துறையுடன் நில்லுங்கள்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Source link