ஜம்மு – காஷ்மீரில் பதுங்கிய பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீரில் கந்தர்பால் மாவட்டத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதியை ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.

ஜம்மு – காஷ்மீரில் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள அரஹாமா பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சிலர் நடமாடுவதாக ஸ்ரீநகரை சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு அப்பகுதியை சுற்றி வளைத்து ராணுவத்தினரும், காஷ்மீர் போலீசாரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமாக பயங்கரவாதிகள் சிலர் நடமாடுவதை கண்டு தாக்குதலுக்கு தயாராகினர். அப்போது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கியால் வீரர்கள் மீது சுட்டனர்.

பதிலுக்கு கூட்டுப்படையினரும் அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் பயங்கரவாதி ஒரு வர் துப்பாக்கி சூட்டுக்கு பலியானார். தொடர்ந்து தப்பியோடிய பயங்கரவாதிகளை ராணுவமும், போலீசும் தீவிரமாக தேடி வருகிறது.

Source link