ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 2 வரை மழைக்கு வாய்ப்பு

நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி…இதுகுறித்து, சென்னை மண்டல வானிலை மையம் கூறி இருப்பதாவது;தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ் மட்ட வளி மண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை Trough நிலவுகிறது. இதனால், இன்று ஜூலை27ஆம் தேதி, வட கடலோர தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜூலை 28, 29மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜூலை 30நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழைமேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் லேசான மழை

ஜூலை 31கோவைநீலகிரிதேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் லேசான மழை

ஆகஸ்ட் 1கோவைநீலகிரிதேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைஉள் மற்றும் வடகடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் மிதமான மழைமேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள்வட கடலோர தமிழகம்புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் மிதமான மழை ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை

சென்னை, புறநகர்ப் பகுதிகளில்…சென்னையில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்இவ்வாறு சென்னை வானிலை மையம் கூறி உள்ளது.

Source link