“ஜெகத்ரட்சகனின் சொத்துகளைப் பறிமுதல் செய்த உத்தரவு ரத்து”

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் திமுக எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன், அவரது மகன் மற்றும் மகள்  ஆகியோருக்கு இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இதனையடுத்து சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி கடந்த 2020ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. 

இந்த சோதனையின் அடிப்படையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் படி சிங்கப்பூரில் போலி நிறுவனங்கள் மூலம் சுமார் ரூ. 42 கோடியும், இலங்கையில் ரூ. 9 கோடியும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபடுத்தப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றச்சாட்டை முன்வைத்திருந்தது. இந்த விவகாரத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பான சொத்துகளையும் அமலாக்கத்துறை பறிமுதல் செய்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்புடைய சொத்துக்கள் பறிமுதல் செய்ததை உச்சநீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்து உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. 

அதாவது சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் குற்றம்சாட்ட ஒவ்வொரு விதிமீறல்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. அதன்படி சுமார் ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனத்தின்  இயக்குநரான ஜெகத்ரட்சகன் மீதான வழக்குகளையும் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கான உத்தரவையும் அமலாக்கத்துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும், “இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு மனுவை இரண்டு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும். அதுவரையில் பழைய உத்தரவுகள் எதையும் கருத்தில் கொள்ளாமல் புதிய விசாரணை நடத்தப்பட வேண்டும்” எனவும் நீதிபதிகள்  உத்தரவு ஒன்றையும் பிறப்பித்துள்ளனர். 

Source link