ஜெயிலர் 2 சுனாமி: ஜெயிலர் 2 படம் அக்டோபர் 15ம் தேதி ரிலீஸானதில் இருந்து பாக்ஸ் ஆபீஸ் அதிர்ந்து கொண்டிருக்கிறது.இந்நிலையில் நேற்று அதாவது 5வது நாளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் இந்தியா மற்றும் உலக அளவில் எத்தனை கோடி வசூலித்தது என்கிற விபரத்தை வெளியிட்டுள்ளது சாக்னிக்.
அதன்படி திங்கட்கிழமை அதாவது நேற்று இந்தியாவில் ரூ.42.35 கோடியும், வெளிநாடுகளில் ரூ. 10 கோடியும் வசூல் செய்திருக்கிறது டைகர் முத்துவேல் பாண்டியன் படம். வழக்கம் போன்று பிற மொழிகளுடன் ஒப்பிடும்போது தமிழில் தான் ஜெயிலர் 2 படத்தின் வசூல் தொடர்ந்து அதிகமாக உள்ளது. நேற்று தமிழில் ரூ. 31 கோடியே 40 லட்சமும், தெலுங்கில் ரூ. 7 கோடியே 15 லட்சமும், இந்தியில் ரூ. 3 கோடியே 35 லட்சமும், கன்னடத்தில் ரூ. 45 லட்சமும் வசூல் நடந்திருக்கிறது.
ஆக இந்தியாவில் 5 நாட்களில் ரூ. 242.25 கோடியும், உலக அளவில் ரூ. 477. 75 கோடியும் வசூல் வந்திருக்கிறது. ஜெயிலர் 2 படம் பார்க்க சிறுவர், சிறுமயிர் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். தியேட்டரில் படம் பார்க்கும்போது ரஜினிகாந்த் படும் கஷ்டத்தை பார்த்து அதை நிஜமென்று நினைத்து குழந்தைகள் கண்ணீர் விடுவதை பெற்றோர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.
ரூ. 1000 கோடி எதிர்பார்ப்பு: ஜெயிலர் 2 படம் ரிலீஸுக்கு தயாரானபோது அது ரூ. 500 கோடி வசூல் செய்யுமா, ரூ. 600 கோடி வசூலிக்குமா என்று யாருக்கும் சந்தேகம் எழவில்லை. ரூ. 1000 கோடி வசூலிக்குமா என்பது தான் அனைவர் மனதிலும் எழுந்த கேள்வியாகும். இந்நிலையில் 5 நாட்களில் ரூ. 477 கோடி எனும் போது இதே அசுர வேகத்தில் வசூல் வேட்டை தொடர்ந்தால் நிச்சயம் ரூ. 1000 கோடி கிளப்பில் சேர்ந்துவிடம் ஜெயிலர் 2 படம்.
76 வயது ஹீரோ: தென்னிந்தியாவின் பெரிய திரையுலகமான கோலிவுட்டில் இதுவரை ஒரு படம் கூட ரூ. 1000 கோடி வசூல் செய்தது இல்லை. அது ஏன் தமிழ் படத்தால் முடியவில்லை என கோலிவுட் ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இதுவரை எந்த தமிழ் படத்தாலும் முடியாத சாதனையை ஜெயிலர் 2 செய்யும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
அந்த புது சாதனை படைக்கும் என நம்பிக்கை அளித்த ஜெயிலர் 2 படத்தின் ஹீரோ 76 வயது இளைஞரான ரஜினிகாந்த். சாதனை செய்ய வயது ஒரு தடையே இல்லை என நிரூபித்துக் கொண்டிருக்கிறார். ஜெயிலர் 2 படம் பார்க்கும் தெலுங்கு ரசிகர்களோ, ரஜினிகாந்த் மாதிரி பிற சீனியர் ஹீரோக்களும் தங்களின் வயதுக்கேற்ற கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
ரஜினி ஆசை: ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் வர வேண்டும் என்பது ரஜினிகாந்த் விருப்பம் ஆகும்.முதலில் அவரின் விருப்பத்தை ஏற்க மறுத்த நெல்சனோ பின்னர் அதை ஏற்று படம் எடுத்தார். இந்நிலையில் தலைவி தமன்னாவின் டான்ஸ் வைக்கலாமே என தலைவர் சொன்னதை கேட்டு அவரை ஆட வைத்திருக்கலாம். அது ஒன்று தான் குறையாக தெரிகிறது என காவாலா ரசிகர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
Source link
