ஜெரோம் பாவலுக்கு 1 0 நாடுகளின் வங்கி தலைவர்கள் ஆதரவு

புதுடில்லி: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வட்டி விகிதங்களை குறைக்குமாறு தனக்கு அரசியல் ரீதியாக தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாகவும், தன் மீது கிரிமினல் வழக்கு தொடரப்போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், அமெரிக்க ‘பெடரல் ரிசர்வ்’ வங்கியின் தலைவர் ஜெரோம் பாவல் அண்மையில் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில், அவருக்கு ஆதரவாக ஐரோப்பா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட 10 முக்கிய நாடுகளின் மத்திய வங்கி தலைவர்கள் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளனர். இதில் இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் மத்திய வங்கிகள் இடம்பெறவில்லை.

Source link