ஜேசன் சஞ்சய் பெயரில் போலிகள்: இந்த பிரச்சனை அப்பா விஜய்க்கே வந்திருக்கே

ஜேசன் சஞ்சய் ஐடி: ஜேசன் சஞ்சய் இயக்குநராகும் முன்பே அவர் பெயரில் எக்ஸ் தளம், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் கணக்குகள் இருந்தது. ஆனால் அவை ஜேசன் சஞ்சய் துவங்கியது கிடையாது. சினிமாவுக்கு வந்த பிறகு தன் முதல் படமான சிக்மா குறித்து தன் அதிகாரப்பூர்வ சமூக வலைதள கணக்குகள் மூலம் அப்டேட் கொடுக்க ஆரம்பித்தார். அதன் பிறகே ஜேசனின் நிஜமான கணக்குகள் எது, போலி எது எது என்பது தெரிய வந்தது.

இருந்தாலும் போலி கணக்குகள் தொடர்ந்து ஆக்டிவாக இருப்பதுடன் ஜேசன் பெயரை பயன்படுத்தியே கருத்தும் தெரிவித்து வருகின்றன. மேலும் ஜேசன் சஞ்சய் ரசிகர்கள் மன்றம் என்கிற பெயரிலும் சமூக வலைதள கணக்குகள் இருக்கிறது. அந்த ரசிகர்மன்ற விஷயம், போலி ஜேசன்கள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் முதல்வர் ஜோசப் விஜய் மகன்.

விஜய் பெயரில் போலி ஐடி: ஜேசன் அறிக்கையை பார்க்கும்போது அவரின் அப்பா விஜய் தான் நினைவுக்கு வருகிறார். எக்ஸ் தளம் மற்றும் இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்திருக்கிறார் விஜய். இருந்தாலும் அவர் பெயரிலேயே பல போலி கணக்குகள் இருக்கிறது. இந்நிலையில் தான் அதே சிக்கல் ஜேசன் சஞ்சய்க்கும் ஏற்பட்டிருக்கிறது. சினிமா பிரபலங்களின் பெயர்களில் சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட போலி கணக்குகள் இருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் சிலரின் நிஜ கணக்கை விட போலி கணக்கை பின்தொடர்வோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

ஜேசன் சஞ்சய் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட அறிக்கையை அவரின் போலி கணக்குகளும், அங்கீகரிக்கப்படாத ரசிகர் மன்ற கணக்குகளும் லைக் செய்திருப்பதுடன், கமெண்ட்டும் செய்துள்ளன. ஜேசன் சஞ்சய் ரசிகர் மன்ற இன்ஸ்டா கணக்கில் ஏகப்பட்ட ஃபாலோயர்கள் இருக்கிறார்கள்.

அதிகாரப்பூர்வ கணக்குகள்: எக்ஸ் தளத்தில் ப்ளூ டிக் வாங்குவது ஒன்றும் பெரிய விஷயம் இல்லையே. ஒரு ப்ளூ டிக் வாங்கி வைக்க மாட்டீங்களா குட்டி தளபதி. நீங்கள் சொல்லித் தான் இது உங்களின் எக்ஸ் கணக்கு என்றே தெரியும் என்கிறார்கள் விஜய் ரசிகர்கள். மேலும் அறிக்கையில் இருக்கும் ஜேசன் சஞ்சய்யின் கையெழுத்தை பார்த்தால் அப்பா விஜய் கையெழுத்து மாதிரி இருப்பதாக கூறியிருக்கிறார்கள்.

ஜேசன் சஞ்சய்யின் இன்ஸ்டா கணக்கு-@jason.sanjay_official ஆகும். ஃபேஸ்புக் கணக்கு JasonSanjay மற்றும் எக்ஸ் தள கணக்கு ஐடி official_jsj. இது தவிர்த்து அவர் பெயரில் இருக்கும் வேறு எந்த கணக்குகளாக இருந்தாலும் அவை போலியே. அதில் இருந்து வரும் போஸ்ட்டுகள், கமெண்ட்டுகள், அறிவிப்புகளுக்கு ஜேசன் சஞ்சய் பொறுப்பு கிடையாது.

ஜேசன் அடையாளம்: இத்தனை ஆண்டுகளாக தளபதி விஜய் மகன் என்கிற ஒரேயொரு அடையாளத்துடன் இருந்த ஜேசன் தற்போது சிக்மா படத்தை இயக்கி வெளியிட்டு இயக்குநர் எனும் புது அடையாளத்தை பெற்றிருக்கிறார். அவர் இயக்கிய சிக்மா இன்று நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.அக்டோபர் 2ம் தேதி தியேட்டர்களில் சிக்மா ரிலீஸானபோது சமூக வலைதளங்களில் அது பற்றி ரொம்பவே சுமாரான விமர்சனங்கள் வந்தது. அதனால் பலர் தியேட்டருக்கு செல்லவில்லை. இது சிக்மா படத்தின் வசூலை பாதித்தது.

சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்

இந்நிலையில் ஓடிடியில் வந்திருப்பதால் இந்த வார இறுதியில் சிக்மாவை பார்த்துவிடும் ஆவலில் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஓடிடியில் படம் பார்த்த பிறகு அது குறித்து நிச்சயம் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவு செய்வார்கள். சில படங்கள் தியேட்டரில் வந்தபோது நெகட்டிவ் விமர்சனங்களையும், ஓடிடியில் பாசிட்டிவ் விமர்சனங்களையும் பெற்றிருக்கிறது. அது மாதிரி சிக்மாவுக்கு நடக்குமா என்பதை பார்க்கலாம்.

Source link