நடிகர் ஜோஜு ஜார்ஜ் இயக்கி வரும் ‘பரிபாடி’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், தமிழில் ‘ஜகமே தந்திரம்’, ‘பஃபூன்’, ‘தக் லைஃப்’, சூர்யாவின் ‘ரெட்ரோ’ படங்களில் நடித்துள்ளார். 7 திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.
நடிகர் ஜோஜு ஜார்ஜ் இயக்கி, நடித்த திரைப்படமான ‘பணி’ பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. ஆக்ஷன் பின்னணியில் உருவான படத்தின் கதாபாத்திரங்கள் மற்றும் கிளைமேக்ஸ் ஆகியவை ரசிகர்களைத் திருப்திபடுத்தியதால் படம் மலையாளம் மற்றும் தமிழிலும் வரவேற்பைப் பெற்றது. ரூ. 15 கோடியில் உருவான இப்படம் ரூ. 30 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
தற்போது, ஜோஜூ ஜார்ஜ் புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதற்கு, ‘பரிபாடி’ எனப் பெயரிட்டுள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில், அன்பறிவு மாஸ்டர்கள் சண்டைக்காட்சிகளில் இப்படம் தயாராகி வருகிறது.
பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
இந்த நிலையில், ‘பரிபாடி’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இப்படத்திற்கு ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இப்படம் இந்தாண்டு கிறிஸ்துமஸ் வெளியீடாகத் திரைக்கு வருகிறது.
