ஜோதிடர் அறிவுறுத்தியதால், சட்டசபை தேர்தலில் களமிறங்க தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை மறுத்து விட்டார்.

ஜோதிடர் அறிவுறுத்தியதால், சட்டசபை தேர்தலில் களமிறங்க தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை மறுத்து விட்டார்.

அண்ணாமலை போட்டியிட தேர்வு செய்த தொகுதிகளில் எதையும், தே.ஜ., கூட்டணியில், பா.ஜ.,வுக்கு அ.தி.மு.க., ஒதுக்கவில்லை. எனினும், கொங்கு மண்டலத்தில் கிடைத்திருக்கும் ஏதேனும் ஒரு தொகுதியை தேர்வு செய்து போட்டியிடுமாறு, அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஆனால், ‘அண்ணாமலை ஜாதகப்படி, நான்கு ஆண்டுகள், அவருக்கு வளர்ச்சியே இருக்காது; தொட்ட காரியம் எல்லாம் சிக்கலிலேயே முடியும்; கட்டங்கள் சரியில்லாததால் தான், கடந்த லோக்சபா தேர்தலில், வலுக்கட்டாயமாக போட்டியிட வைக்கப்பட்டு தோற்றார்; தமிழக பா.ஜ., தலைவர் பதவியையும் இழந்தார்’ என, ஜோதிட ரீதியாக அடுக்கடுக்கான அதிர்ச்சி தகவல்கள் கூறப்பட்டுள்ளன.

அதன்படி, தற்போது, நான்காம் ஆண்டின் துவக்கத்தில் இருப்பதால், தன் ஆஸ்தான ஜோதிடரான பெங்களூரில் உள்ள திருவண்ணாமலை நாடி ஜோதிடரை, சில நாள்களுக்கு முன் அண்ணாமலை சந்தித்துள்ளார்.

அபபோது அந்த ஜோதிடர், ‘இன்னும் ஓராண்டுக்கு ரொம்பவே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மோசமான காலகட்டத்தில் வலுக்கட்டாயமாக எடுக்கும் முடிவு பெரிய ஆபத்தை தரும். சரியான தொகுதி கிடைக்காமல், போட்டியிட்டு மூன்றாவது முறையும் தோற்றால், அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.

‘நல்ல காலம் பிறக்கும் வரை தேர்தலில் போட்டியிட வேண்டாம். உங்களின் எதிரிகள் வீழும் நேரம் இது. எனவே பொறுமையாக இருங்கள்’ என, அண்ணாமலையிடம் திட்டவட்டமாக சொல்லி விட்டார். ஜோதிடரின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, இந்த தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்ற முடிவில் அண்ணாமலை இருக்கிறார்.

அதேநேரம், ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டே ஆக வேண்டும் என கட்சி மேலிடம் அவருக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது என்கின்றனர் பா.ஜ.,வினர்.

Source link