டாக்கா: ஐரோப்பிய நாடான லண்டனின் ஹாம்ப்ஸ்டெட் மற்றும் ஹைகேட் தொகுதியில் தொழிலாளர் கட்சி சார்பில் எம்.பி.,யாக

டாக்கா: ஐரோப்பிய நாடான லண்டனின் ஹாம்ப்ஸ்டெட் மற்றும் ஹைகேட் தொகுதியில் தொழிலாளர் கட்சி சார்பில் எம்.பி.,யாக இருப்பவர் துலிப் சித்திக். வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மருமகளான இவர், 2024 – 25ல் பிரிட்டன் கருவூலத்தின் பொருளாதாரச் செயலராகவும், நகர அமைச்சராகவும் பதவி வகித்தவர்.

வங்கதேசத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து, லண்டனில் வசிக்கும் இவர் மீதும் ஊழல் புகார்கள் சுமத்தப்பட்டன. இதன் காரணமாக தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஹசீனாவுடன் தொடர்புடைய மூன்று வெவ்வேறு ஊழல் வழக்குகளில் துலிப் சித்திக்கிற்கு ஏற்கனவே ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஷேக் ஹசீனாவின் செல்வாக்கைப் பயன்படுத்தி துலிப் சித்திக், டாக்காவின் உயர்தர பகுதியான குல்ஷான் – -2-ல் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு நிலம் வழங்குவதில் மோசடி செய்ததாக, அந்நாட்டு ஊழல் தடுப்பு ஆணையம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த புகாரில் இன்டர்போல் உதவியுடன், ரெட் கார்னர் எனப்படும் தேடப்படும் குற்றவாளியாக நோட்டீஸ் பிறப்பிக்க டாக்கா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த ரெட் கார்னர் நோட்டீஸ் உத்தரவால், துலிப் சித்திக் கைது செய்யப்படுவதற்கான சர்வதேச நடவடிக்கைகள் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link