டாக்கா: வங்கதேசத்தில் மகத்தான வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ள, மறைந்த முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் பி.என்.பி., எனப்படும் வங்கதேச தேசியவாத கட்சி, வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி கூறியதுடன், ‘இந்தியாவுடன் உறவை வலுப்படுத்த விருப்புகிறோம்’ என, தெரிவித்துள்ளது.
மாணவர் போராட்டம், ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றங்களை சந்தித்த நம் அண்டை நாடான வங்கதேசத்தில், சமீபத்தில் பார்லிமென்ட் தேர்தல் நடந்தது. இதில், மறைந்த முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பி.என்.பி., எனப்படும் வங்கதேச தேசியவாத கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது.
இதையடுத்து, தாரிக் ரஹ்மானை நேற்று முன்தினம் தொலைபேசியில் அழைத்து பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
இதற்கு நன்றி தெரிவித்து பி.என்.பி., கட்சி நேற்று வெளியிட்ட அறிக்கை:
வங்கதேசம் அனைத்து தரப்பு மக்களையும்
தொடர்ச்சி 5ம் பக்கம்
சமநிலை உறவு!
இந்தியாவுடனான எதிர்கால உறவுகள் வங்கதேச நலனை அடிப்படையாகக் கொண்டே இருக்கும். எந்த நாட்டையும் எங்களுக்கு மேலாக பார்க்க மாட்டோம்; இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் சமநிலை உறவு பேணப்படும்.
-தாரிக் ரஹ்மான் தலைவர், வங்கதேச தேசியவாத கட்சி
