மும்பை: டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின், நடப்பு நிதியாண்டு மூன்றாம் காலாண்டு வருவாய், 3,486 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு, 69,605 கோடி ரூபாய் ஈட்டியுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 5,406 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது.
டாடா குழுமத்தின், சொகுசு கார் பிராண்டான ஜே.எல்.ஆர்., காருக்கான பிரிட்டன் உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட சைபர் தாக்குதலின் காரணமாக, இந்த இழப்பு ஏற்பட்டதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனால், டாடாவின் மொத்த கார் விற்பனை, 26 சதவீதமும், ஜே.எல்.ஆர்., நிறுவனத்தின் கார் விற்பனை, 40 சதவீதமும் குறைந்துள்ளது.
பிரிட்டன் ஆலையில், கார் உற்பத்தி இயல்புக்கு வந்த பிறகும், ஏற்றுமதியில் தாமதம், அமெரிக்காவின் பரஸ்பர வரி, சீனாவில் குறையும் தேவை உள்ளிட்ட தடங்களின் காரணமாகவும் விற்பனை குறைந்ததாக கூறப்படுகிறது.
,
