'டாப்' டக்கர்…அயர்லாந்து 'சூப்பர்' * ஓமன் அணியை வீழ்த்தியது

கொழும்பு: லார்கன் டக்கர் (51 பந்தில் 94 ரன்) விளாசல் கைகொடுக்க, அயர்லாந்து அணி 96 ரன் வித்தியாசத்தில் ஓமனை வீழ்த்தியது.

இலங்கையின் கொழும்புவில் நடந்த ‘பி’ பிரிவு லீக் போட்டியில் அயர்லாந்து, ஓமன் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ஓமன், பீல்டிங் தேர்வு செய்தது.

அயர்லாந்து அணியின் டிம் டெக்டர் (5), ராஸ் அடைர் (14), ஹாரி டெக்டர் (14) என ‘டாப்-3’ வீரர்கள் ஏமாற்ற, 45/3 என திணறியது. பின் கேப்டனர் லார்கன் டக்கர், கரேத் டிலானி இணைந்து அணியை மீட்டனர். 5வது விக்கெட்டுக்கு 56 பந்தில் 101 ரன் சேர்த்த போது டிலானி (56) அவுட்டானார். கடைசி நேரத்தில் டாக்ரெல் 5 சிக்சர் விளாசினார். டக்கர்-டாக்ரெல் ஜோடி 19 பந்தில் 70 ரன் சேர்த்தது. அயர்லாந்து அணி 20 ஓவரில் 235/5 ரன் குவித்தது. டக்கர் (94 ரன், 51 பந்து, 4 சிக்சர், 10 பவுண்டரி), டாக்ரெல் (35 ரன், 9 பந்து) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஆமிர் அரைசதம்

பின் களமிறங்கிய ஓமன் அணிக்கு ஆமிர் கலீம், கேப்டன் ஜதிந்தர் சிங் (7) ஜோடி துவக்கம் தந்தது. ஆமிர் (50) அரைசதம் அடித்து அவுட்டாக, ஹம்மத் 46 ரன் எடுத்தார். அணியின் 8 பேட்டர்கள், ஒற்றை இலக்க ரன்னில் திரும்பினர். ஓமன் அணி 18 ஓவரில் 139 ரன்னுக்கு சுருண்டு தோற்றது.

ஓமன் ‘அவுட்

புள்ளிப்பட்டியலில் இலங்கை (4 புள்ளி), ஜிம்பாப்வே (4), ஆஸ்திரேலியாவுக்கு (2) அடுத்து, 4வது இடத்தில் உள்ளது அயர்லாந்து (2). தொடர்ந்து 3 போட்டியில் தோற்ற ஓமன், ‘சூப்பர்-8’ சுற்று வாய்ப்பை இழந்தது.

மூத்த வீரர்

ஓமன் வீரர் ஆமிர் கலீம், நேற்று 29 பந்தில் 50 ரன் எடுத்தார். ‘டி-20’ உலக கோப்பை அரங்கில் அரைசதம் அடித்த மூத்த வீரர் (44 ஆண்டு, 86 நாள்) ஆனார். முன்னதாக ஓமனின் முகமது நதீம் (43 ஆண்டு, 161 நாள், 2026, எதிர்-இலங்கை) இருந்தார்.

235 ரன்

நேற்று 235/5 ரன் எடுத்த அயர்லாந்து, ‘டி-20’ அரங்கில் தனது அதிகபட்ச ஸ்கோரை (இதற்கு முன் 226/4, எதிர்-ஆஸ்திரியா, 2023) பதிவு செய்தது.

* ஒட்டுமொத்த ‘டி-20’ உலக கோப்பை அரங்கில், இது, ஒரு அணி எடுத்த இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் (235/5) ஆனது. முதலிடத்தில் இலங்கை (260/6, 2007, எதிர்-கென்யா) உள்ளது.

Source link