‘எ ன்.எஸ்.டி.எல்., மற்றும் சி.டி.எஸ்.எல்.,’ தரவுகளின்படி, 2025 – 26ம் நிதி ஆண்டில், புதிதாக 3.2 கோடி ‘டிமேட்’ கணக்குகள் மட்டுமே துவங்கப்பட்டுள்ளன. இது அதற்கு முந்தைய நிதி ஆண்டில் துவங்கப்பட்ட 4.1 கோடி கணக்குகளை விட 22 சதவீதம் குறைவாகும்.
தற்போதைய நிலையில், நாட்டின் மொத்த ‘டிமேட்’ கணக்குகளின் எண்ணிக்கை 22.5 கோடியை கடந்துள்ளது. டிஜிட்டல் முறை மற்றும் சேமிப்பு மீதான விழிப்புணர்வு வாயிலாக, வரும் நிதி ஆண்டுகளில் புதிய கணக்கு துவக்கம் சீராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
