டில்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் முதல் அதிமுக தேர்தல் பிரசாரம் வரை; இன்றைய முக்கிய நிகழ்வுகள் (மார்ச் 25)

நமது நிருபர்

தமிழகம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள். இன்று (மார்ச் 25) நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகள் என்னென்ன?

அது எத்தனை மணிக்கு என்பது குறித்து ஓர் சிறப்பு அலசல். மேலும் தொடர்ந்து விவரங்களை அறிய தினமலர் இணையதளம் தொடர்ந்து படியுங்கள்.

* மேற்காசிய போர் பதற்றம் மற்றும் அதன் தாக்கம் குறித்து விவாதிக்க, டில்லியில் இன்று, அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இக்கூட்டத்துக்கு, பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங் தலைமை வகிக்கிறார்.

* தமிழக சட்டசபை தேர்தலையொட்டி இன்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பிரசாரத்தை துவங்குகிறார்; சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் வழிபட்டுவிட்டு மாலையில் பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார்.

* முதலாவது டில்லி சர்வதேச திரைப்படத் திருவிழா, புதுடில்லியில் இன்று துவங்கி வரும் 31ம் தேதி வரை நடைபெறுகிறது.

* கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்து இன்று திமுக ஆலோசனை நடத்தி முடிவு செய்ய உள்ளது.

* கேரள சட்டசபை தேர்தலையொட்டி இன்று கோழிக்கோடு, மலப்புரம் உள்ளிட்ட இடங்களில் இன்று காங்கிரஸ் எம்பியும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

Source link