டில்லியில் ராகுல் – மோடி திடீர் சந்திப்பு: சோனியா உடல்நிலை குறித்து விசாரித்தார் பிரதமர்

– நமது டில்லி நிருபர் -: அரசியலில் இரு துருவங்களாக இருக்கும் தலைவர்கள், பொது இடத்தில், முரண்பாடுகளை மறந்து பேசிக் கொள்வது அபூர்வம். அப்படி ஒரு சம்பவம் டில்லியில் நேற்று நிகழ்ந்தது. அதுவும் ஐந்து மாநில தேர்தல் நடக்கும் சமயத்தில், பிரதமர் மோடியும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலும் பொது இடத்தில் திடீரென சந்தித்த போது பரஸ்பரம் நலம் விசாரித்தனர்.

மஹாத்மா ஜோதிபா பூலேவின் 200வது பிறந்த நாளை முன்னிட்டு, பார்லி., வளாகத்தில் உள்ள பிரேர்ணா ஸ்தலம் என்ற பகுதியில், அவருக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

பதில் வணக்கம் இதில் பங்கேற்க பிரதமர் மோடியும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், காங்., முன்னாள் தலைவருமான ராகுலும் அங்கு வந்திருந்தனர்.

சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் ராம் மேஹ்வால், நட்டா, ராஜ்யசபா முன்னாள் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்றனர். அப்போது காரில் இருந்து இறங்கி வந்த பிரதமர் மோடியை, சபாநாயகர் ஓம் பிர்லா, ராகுல் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பிரதமர் மோடியும் இரு கைகூப்பி அவர்களுக்கு பதில் வணக்கம் செலுத்தினார்.

பின்னர் நேரே ராகுலை சந்தித்த அவர், சில நிமிடங்கள் வரை உரையாடினார். ராகுலும் மிக இயல்பாக பிரதமர் மோடியிடம் நட்பாக அளவளாவினார்.

குறிப்பாக, சோனியாவின் உடல்நலம் குறித்து பிரதமர் மோடி விசாரித்ததாக கூறப்படுகிறது.

பரஸ்பரம் குறுகிய நேர சந்திப்பில் அரசியலில் இரு துருவங்களாக உள்ள தலைவர்கள் இயல்பாக பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்ட நிகழ்வு, அங்கிருந்தவர் களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

அரசியலில் கொள்கை ரீதியிலான முரண்பாடுகள் இருந்தாலும், பொது இடத்தில், அதை மறந்து பரஸ்பரம் அன்புடன் பேசிக் கொள்ளும் பண்பு அவசியம் என்பதை இந்நிகழ்வு உணர்த்துகிறது என, சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Source link