டில்லி தென்மேற்கு மாவட்டத்தில் தீ விபத்தில் 80 குடிசைகள் நாசம்

புதுடில்லி:தென் மேற்கு மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், 80 குடிசைகள் எரிந்து நாசமாகின.

டில்லி தென் மேற்கு மாவட்டத்தில் உள்ள மதியலா என்ற பகுதியில் மீன் மார்க்கெட் ஒன்று செயல்படுகிறது. அதன் அருகே மிகவும் நெருக்கமாக கட்டப்பட்ட வீடுகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு அந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் தீ பிடித்ததாக கூறப்படுகிறது.

நெருப்பு பொறி அதன் அருகே அமைந்துள்ள கழிவு பேப்பர் குடோன்களில் விழுந்த நெருப்பு பொறி, உடனே பற்றியதில், 80க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் தீயில் கருகின.

தகவல் அறிந்து அங்கு, 25க்கும் மேற்பட்ட வாகனங்களில் விரைந்த தீயணைப்பு படையினர், தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை அணைக்க முயன்றனர்.

எனினும், மளமளவென பக்கத்தில் இருந்த பகுதிகளுக்கும், தீ பரவியதால், அதை கட்டுப்படுத்த வீரர்கள் கடுமையாக போராடினர்.

ஒரு வழியாக, நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு தீயை கட்டுப்படுத்திய வீரர்கள், தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆராய்ந்து வருகின்றனர். தீ விபத்தில் சிக்கிய குடிசைகள் அமைந்துள்ள அந்த இடம், தனியாருக்கு சொந்தமானது.

பலனளிக்கவில்லை அந்த பகுதியில் உள்ள வீடுகளை, அப்புறப்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

எனவே, அந்த இடத்தில் உரிமையாளர் மேற்கொண்ட ரகசிய நடவடிக்கையால் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டிருக்கலாம் என கூறப் படுகிறது.

எனினும், பல அம்சங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொழிற்சாலை எரிந்து நாசம் திடீர் தீ விபத்தால், ‘கேபிடல் பவர் சிஸ்டம் லிமிடெட்’ என்ற அந்த தொழிற்சாலையில், அப்போது பணியில் இருந்த, 240 தொழிலாளர்களும் தீயில் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து அந்த இடத்திற்கு விரைந்த, 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள், நீண்ட நேரம் போராடி, தீயை அணைத்தன. பல இடங்களில் அந்த தொழிற்சாலையின் கதவுகள் உடைக்கப்பட்டு, தீயில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டனர். இந்த விபத்தில், பாதிக்கப்பட்டோர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலருக்கு, கால், கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால், அந்த மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும், தொழிலாளர்களின் உடல் நிலை ஸ்திரமாக இருப்பதாக டாக்டர்கள் கூறினர்.

Source link