தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே இருக்கும் போது திமுகவின் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனும் பா.ஜ.கவின் அண்ணாமலையும் தொடர்ந்து மோதி வருகின்றனர். வரும் சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரைகளில் கட்சியினர் ஒருவருக்கொருவர் மீதான குற்றச்சாட்டுகளை அடுக்குவது வழக்கமே இதில் தற்போது பி டி ஆர் பழனிவேல் ராஜன் மற்றும் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் இடையிலான சொற்போர் சூடு பிடித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நிதியமைச்சர் தனது செருப்புக்குக்கூட சமமானவரில்லை என அண்ணாமலை பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது முதல் இருவருக்கும் இடையில் சலசலப்பு எழுந்தது. இதற்கு அப்போது பி.டி.ஆர் பதிலடி தந்ததும் குறிப்பிடத்தக்கது.
தற்போதைய தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் திமுக அமைச்சரான பிடிஆரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் சுந்தர்.சி போட்டியிடுகிறார். “இரண்டு முறை அமைச்சராக இருந்தும், தொகுதிக்காக எதுவும் செய்யவில்லை” என்றும் மதுரை மாநகராட்சியில் ஊழல் பிரச்சினைகள் உள்ளதாகவும், மக்கள் அதில் அதிருப்தியுடன் உள்ளார்கள் என்றும் பி டி ஆர் மீது அவர் குற்றம் சாட்டினார். பி டி ஆரும் சுந்தர்.சிக்கு பதில் அளித்த போது குஷ்புவை சுட்டிக்காட்டியதாக கூறப்படுகிறது.
