டி-20 உலக கோப்பை கிரிக்கெட் பைனலில் இந்தியா

மும்பை: டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 2வது அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி பைனலுக்கு தகுதி பெற்றது

இந்தியா, இலங்கையில் 10வது ‘டி-20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடக்கும் இரண்டாவது அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இந்தியா, இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது.

இதனையடுத்து இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணி வீரர்கள் அதிரடியாக விளையாடினர்.

துவக்க வீரர் அபிஷேக் சர்மா 7 பந்துகளில் 9 ரன் எடுத்து ஜாக்ஸ் பந்தில் சால்ட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

சஞ்சு சாம்சனுடன் சேர்ந்து அதிரடியாக ரன் குவித்த இஷான் கிஷான் 18 பந்தில் 39 ரன்னில் ரஷித் பந்தில் ஜாக்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

மற்றொரு துவக்க வீரர் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி 26 பந்துகளில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் 42 பந்துகளில் 89 ரன் எடுத்துஇருந்தபோது ஜாக்ஸ் பந்தில் சால்ட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

கேப்டன் சூர்யகுமார் 6 பந்துகளில் 11 ரன் எடுத்த போது ரஷீத் பந்துவீச்சில் பட்லர் ஸ்டம்ப்பிங் செய்தார்.

ஷிவம் துபே 25 பந்துகளில் 43 ரன் எடுத்து இருந்த போது ரன் அவுட் ஆனார்.

7 பந்துகளில் 21 ரன் எடுத்த திலக் வர்மா போல்டானார்.

ஹர்திக் பாண்டியா 27 ரன் எடுத்த போது ரன் அவுட் ஆனார்.

இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 253 ரன் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணியின் ஜாக்ஸ் மற்றும் ரஷீத் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

வெற்றி

இதன்பிறகு 254 என்ற கடின இலக்குடன் இங்கிலாந்து அணியின்துவக்க வீரர் பில் சால்ட் 3 பந்துகளில் 5 ரன் எடுத்தபோது ஹர்திக் பாண்டியா பந்தில் அக்சர் படேலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

பும்ரா பந்துவீச்சில்,ஹாரி புரூக் 7 ரன்னில் அக்சர் படேலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

ஜோஸ் பட்லர் 25 ரன் எடுத்திருந்தபோது வருண் சக்கரவர்த்தி பந்தில் போல்டானார்.

டாம் பாண்டன்17 ரன்னில் அக்சர் பந்தில் போல்டானார்.

வில் ஜாக்ஸ் 35 ரன் எடுத்த போது அர்ஷ்தீப் பந்தில், துபேயிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

இங்கிலாந்து அணியின் பெத்தேல் 107 ரன்னில் அவுட்டானார்.

சாம் கரண் 18 ரன்னில் ஹர்திக் பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தார்

இங்கிலாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 246 ரன் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்தியஅணி 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது.

வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் பைனலில் நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது.

Source link