டி-20 உலக கோப்பை: நெதர்லாந்து அணிக்கு 194 ரன் இலக்கு

ஆமதாபாத்: நெதர்லாந்து அணிக்கு எதிரான டி-20 உலக கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணி 20 ஓவரில் 193 ரன் எடுத்தது.

ஆமதாபாத்தில் நடக்கும் டி-20 உலக கோப்பை லீக் சுற்றில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

இந்தியா, இலங்கையில் 10வது ‘டி-20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. இன்று குஜராத்தின் ஆமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடக்கும் முக்கியத்துவம் இல்லாத லீக் போட்டியில் இந்தியா, நெதர்லாந்து மோதுகின்றன. இந்தியா ஏற்கனவே ‘சூப்பர்-8’ சுற்றுக்கு முன்னேறிவிட்டது. நெதர்லாந்து வெளியேறிவிட்டது.

இன்றைய போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.

தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி, துவக்க ஆட்டக்காரர்களான அபிஷே க் சர்மா, இஷான் கிஷன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் 3 பந்துகளை சந்தித்த அபிஷே க் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

ஒரளவு தாக்குப்பிடித்த இஷான் கிஷன் 18 ரன்கள் சேர்த்த நிலையில் தட் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த திலக் வர்மா 31 ரன்னிலும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 34 ரன்கள் சேர்த்து அவுட் ஆகினர்.

ஷிவம் துபே அதிரடி அரை சதம்:

அதிரடியாக விளையாடிய ஷிவம் துபே 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடித்து அரைசதம் கடந்தார். இறுதியில் வான் பீக் பந்தில் 66 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறினார். ஹர்திக் பாண்ட்யா 30 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். ரிங்கு சிங் ஆட்டமிழக்காமல் 6 ரன்களுடன் இருந்த நிலையில் இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 193 ரன் எடுத்தது.நெதர்லாந்து தரப்பில் லோகன் வான் பீக் 3 விக்கெட்டுகளையும் ஆர்யன் தட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து நெதர்லாந்து அணி 194 ரன்கள் வெற்றி இலக்காகக்கொண்டு விளையாடி வருகிறது.

Source link