டி -20 உலக கோப்பை பைனல்: இந்தியா பேட்டிங்

ஆமதாபாத்: ‘டி-20’ உலக கோப்பை பைனலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பீல்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இதனையடுத்து இந்தியா அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

இந்தியா, இலங்கையில் 10வது ‘டி-20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. இன்று குஜராத்தின் ஆமதாபாத்தில் நடக்கும் பைனலில் ‘நடப்பு சாம்பியன்’ இந்தியா, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பீல்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இதனையடுத்து இந்தியா அணி அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அரையிறுதியில் களமிறங்கிய அதே அணியே பைனலிலும் களமிறங்க உள்ளது.

இதுவரை

சர்வதேச ‘டி-20’ அரங்கில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் 30 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 18, நியூசிலாந்து 11ல் வென்றன. ஒரு போட்டி ‘டை’ ஆனது.

* ‘டி-20’ உலக கோப்பை அரங்கில் இவ்விரு அணிகள் மூன்று முறை (2007ல் ‘சூப்பர்-8’, 2016ல் ‘சூப்பர்-10’, 2021ல் ‘சூப்பர்-12’) மோதின. அனைத்திலும் நியூசிலாந்து வெற்றி பெற்றது.

* ‘டி-20’ உலக கோப்பை பைனலில் இவ்விரு அணிகள் முதன்முறையாக மோதுகின்றன.

மோடி மைதானத்தில்…

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய மோடி மைதானத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் ஒரு முறை (2023) மோதின. இதில் இந்தியா வென்றது.

பைனலுக்கு வந்த பாதை

இந்தியா

லீக் சுற்று

* அமெரிக்காவை வீழ்த்தியது (29 ரன்)

* நமீபியாவை வென்றது (93 ரன்)

* பாகிஸ்தானை தோற்கடித்தது (61 ரன்)

* நெதர்லாந்தை வீழ்த்தியது (17 ரன்)

‘சூப்பர்-8’

* தென் ஆப்ரிக்காவிடம் வீழ்ந்தது (76 ரன்)

* ஜிம்பாப்வேயை வென்றது (72 ரன்)

* வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது (5 விக்.,)

அரையிறுதி

* இங்கிலாந்தை வென்றது (7 ரன்)

நியூசிலாந்து

லீக் சுற்று

* ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது (5 விக்.,)

* எமிரேட்சை வென்றது (10 விக்.,)

* தென் ஆப்ரிக்காவிடம் வீழ்ந்தது (7 விக்.,)

* கனடாவை தோற்கடித்தது (8 விக்.,)

சூப்பர்-8′

* மழையால் ரத்து (எதிர்: பாக்.,)

* இலங்கையை வீழ்த்தியது (61 ரன்)

* இங்கிலாந்திடம் தோல்வி (4 விக்.,)

அரையிறுதி

* தென் ஆப்ரிக்காவை வென்றது (9 விக்.,)

காத்திருக்கும் சாதனை

பைனலில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில், சொந்த மண்ணில் ‘டி-20’ உலக கோப்பை வென்ற முதல் அணி என்ற சாதனை படைக்கலாம். தவிர, தொடர்ச்சியாக 2 முறை ‘டி-20’ உலக கோப்பை வென்ற முதல் அணியாகலாம்.

* மூன்று முறை உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய முதல் அணி என்ற வரலாறும் படைக்கலாம். இதுவரை இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகள் தலா 2 முறை கோப்பை வென்றுள்ளன.

எட்டாவது முறை

நியூசிலாந்து அணி 8வது முறையாக ஐ.சி.சி., தொடரின் பைனலுக்கு முன்னேறியது. இரு முறை மட்டும் (சாம்பியன்ஸ் டிராபி–2000, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்-2021) கோப்பை வென்றது. ஐந்து முறை (சாம்பியன்ஸ் டிராபி-2009, 2025, உலக கோப்பை-2015, 2019, ‘டி-20’ உலக கோப்பை-2021) பைனலில் தோற்றது. இன்றைய பைனலில் அசத்தினால் நியூசிலாந்து அணிக்கு முதல் உலக கோப்பை கிடைக்கும்.

15வது முறை

இந்திய அணி 15வது முறையாக ஐ.சி.சி., தொடரின் பைனலுக்கு முன்னேறியது. இதில் 7 முறை (உலக கோப்பை-1982, 2011, ‘டி-20’ உலக கோப்பை-2007, 2024, சாம்பியன்ஸ் டிராபி-2002, 2013, 2025) கோப்பை வென்றது. ஏழு முறை (உலக கோப்பை-2003, 2023, ‘டி-20’ உலக கோப்பை-2014, சாம்பியன்ஸ் டிராபி-2000, 2017, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்-2021, 2023) தோல்வியடைந்தது. இன்று அசத்தினால் 8வது கோப்பை வெல்லலாம்.

பரிசு

‘டி-20’ உலக கோப்பை வெல்லும் அணிக்கு ரூ. 27.48 கோடி பரிசு கிடைக்கும். இரண்டாவது இடம் பெறும் அணி ரூ. 14.65 கோடி பெறும்.

Source link