டி- 20 உலக கோப்பை பைனல்: இந்திய அணி 255 ரன் குவிப்பு

ஆமதாபாத்: ‘டி-20’ உலக கோப்பை பைனலில் இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 255 ரன் குவித்துள்ளது. அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தனர்.

இந்தியா, இலங்கையில் 10வது ‘டி-20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. இன்று குஜராத்தின் ஆமதாபாத்தில் நடக்கும் பைனலில் ‘நடப்பு சாம்பியன்’ இந்தியா, நியூசிலாந்தை எதிர்கொண்டது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பீல்டிங் செய்ய முடிவு செய்தது. இதனையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்தது.

துவக்க வீரர் அபிஷேக் சர்மா 18 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதன் மூலம் டி -20 உலக கோப்பை தொடரில் 18 பந்துகளில் அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். தொடர்ந்து அவர் 21 பந்துகளில் 52 ரன் எடுத்து ரச்சீன் ரவிந்திரா பந்தில் செயிபர்டிடடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

மற்றொரு துவக்க வீரரான சஞ்சு சாம்சனும் 33 பந்துகளில் அரைசதம் அடித்தார். அவர் 46 பந்துகளில் 89 ரன் எடுத்து அவுட் ஆனார்.

இவரை தொடர்ந்து இஷான் கிஷனும் 23 பந்துகளில் அரைசதம் அடித்தார். அவர், 54 ரன் எடுத்த போது நீஷம் பந்துவீச்சில் சாம்பமனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அடுத்து வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் டக் அவுட் ஆனார். 16 வது ஓவரில் மட்டும் சஞ்ச சுாம்சன், இஷான் கிஷன் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் ஆட்டமிழந்தனர்.

ஹர்திக் பாண்டியாவும் 16 பந்தில் அவுட் ஆனார்.

கடைசி கட்டத்தில் துபே அதிரடி காட்ட இந்திய ரன் வேகம் அதிகரித்தது

இறுதியில் இந்திய அணி 20 ஓவரில்5 விக்கெட் இழப்புக்கு 255 ரன் எடுத்துள்ளது.

Source link