டி- 20 உலக கோப்பை வென்று சாதனை படைத்தது இந்தியா

ஆமதாபாத்: ‘டி-20’ உலக கோப்பை பைனலில் நியூசிலாந்து அணியை 96 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி கோப்பை வென்று சாதனை படைத்தது.

இந்தியா பேட்டிங்

இந்தியா, இலங்கையில் 10வது ‘டி-20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. இன்று குஜராத்தின் ஆமதாபாத்தில் நடந்த பைனலில் ‘நடப்பு சாம்பியன்’ இந்தியா, நியூசிலாந்தை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பீல்டிங் செய்ய முடிவு செய்தது. இதனையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்தது.

அரைசதம்

துவக்க வீரர் அபிஷேக் சர்மா 18 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதன் மூலம் டி -20 உலக கோப்பை தொடரில் 18 பந்துகளில் அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். தொடர்ந்து அவர் 21 பந்துகளில் 52 ரன் எடுத்து ரச்சீன் ரவிந்திரா பந்தில் செயிபர்டிடடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

மற்றொரு துவக்க வீரரான சஞ்சு சாம்சனும் 33 பந்துகளில் அரைசதம் அடித்தார். அவர் 46 பந்துகளில் 89 ரன் எடுத்து அவுட் ஆனார்.இவரை தொடர்ந்து இஷான் கிஷனும் 23 பந்துகளில் அரைசதம் அடித்தார். அவர், 54 ரன் எடுத்த போது நீஷம் பந்துவீச்சில் சாம்பமனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் டக் அவுட் ஆனார். 16 வது ஓவரில் மட்டும் சஞ்ச சுாம்சன், இஷான் கிஷன் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் ஆட்டமிழந்தனர். ஹர்திக் பாண்டியாவும் 16 பந்தில் அவுட் ஆனார்.

கடைசி கட்டத்தில் துபே அதிரடி காட்ட இந்திய ரன் வேகம் அதிகரித்தது இறுதியில் இந்திய அணி 20 ஓவரில்5 விக்கெட் இழப்புக்கு 255 ரன் எடுத்தது. நியூசிலாந்து அணியின் நீஷம் 3 விக்கெட் எடுத்தார்.

விக்கெட் சரிவு

இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அந்த அணியின் பின் ஆலம் 9 ரன் எடுத்திருந்த போது ஆக்சர் படேல் வீசிய பந்தில் திலக் வர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

ரச்சின் ரவீந்திரா 1 ரன் மட்டும் எடுத்து பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த பிலிப்சும் 5 ரன் எடுத்து இருந்தபோது ஆக்சர் படேல் பந்தில் போல்டானார்.

துவக்க வீரர் டிம் செய்பர்ட் 51 ரன் எடுத்திருந்த போது வருண் பந்தில் இஷான் கிஷனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

சாப்மேன் 3 ரன் எடுத்துஇருந்த போது ஹர்திக் பந்தில் போல்டானார்.

மிச்சல் 17 ரன் எடுத்து இருந்த போது அக்சர் படேல் பந்தில், இஷான் கிஷனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

நீஷம் 3 ரன்னிலும், ஹென்றி ரன் எடுக்காமலும் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.

கேப்டன் சான்ட்னர் 43 ரன் மட்டும் எடுத்து பும்ரா பந்தில் போல்டானார்.

இறுதியில் நியூசிலாந்து அணி 19 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 159 ரன் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 96 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா சாதனை படைத்தது.

சாதனை

பைனலில் இந்திய அணி வெற்றி பெற்றதன் வாயிலாக, சொந்த மண்ணில் ‘டி-20’ உலக கோப்பை வென்ற முதல் அணி என்ற சாதனை படைத்தது. தவிர, தொடர்ச்சியாக 2 முறை ‘டி-20’ உலக கோப்பை வென்ற முதல் அணி ஆனது.

* மூன்று முறை உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய முதல் அணி என்ற வரலாறும் படைத்தது. இதுவரை இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகள் தலா 2 முறை கோப்பை வென்றுள்ளன.

15வது முறை

இந்திய அணி 15வது முறையாக ஐ.சி.சி., தொடரின் பைனலுக்கு முன்னேறியது. இதில் 7 முறை (உலக கோப்பை-1982, 2011, ‘டி-20’ உலக கோப்பை-2007, 2024, சாம்பியன்ஸ் டிராபி-2002, 2013, 2025) கோப்பை வென்றது. ஏழு முறை (உலக கோப்பை-2003, 2023, ‘டி-20’ உலக கோப்பை-2014, சாம்பியன்ஸ் டிராபி-2000, 2017, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்-2021, 2023) தோல்வியடைந்தது. 8வது கோப்பை வென்றது.

பரிசு

‘டி-20’ உலக கோப்பை வென்றதன் மூலம் இந்திய அணிக்கு ரூ. 27.48 கோடி பரிசு கிடைத்தது. இரண்டாவது இடம் பிடித்த நியூசி., அணி ரூ. 14.65 கோடி பெற்றது.

Source link