டெக்னிக்கல் அனாலிசிஸ்: கரடியின் பிடி சற்று தளர்கிறது

ஏற்றத்துடன் ஆரம்பித்த நிப்டி, தொடர்ந்து நாள் முழுவதும் ஏற்றம் கண்டு, நாளின் இறுதியில் 275 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன.

இவற்றில் ‘நிப்டி இந்தியா எப்.பி.ஐ., 150’ குறியீடு, குறைந்தபட்சமாக 1.18 சதவீத ஏற்றத்துடனும்; ‘நிப்டி மைக்ரோகேப் 250’ குறியீடு அதிகபட்சமாக 2.11 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளில், 17 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 2 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் நிப்டி ஐ.டி., குறியீடு அதிகபட்சமாக 1.91 சதவீத இறத்துடனும்; ‘நிப்டி ஆட்டோ’ குறியீடு அதிகபட்சமாக 2.85 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன.

வர்த்தகம் நடந்த 3,342 பங்குகளில், 2,666 ஏற்றத்துடனும்; 575 இறக்கத்துடனும்; 101 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. நிப்டி சட்டென ஒரு ரெக்கவரியை கண்டிருந்தாலும், டிரெண்ட் இன்னும் சற்று பியரிஷாகத் தான் இருக்கிறது. ஆர்.எஸ்.ஐ., மற்றும் எம்.ஏ.சி.டி., போன்றவை இன்னமும் ஏறுவதற்கு வாய்ப்பிருக்கிறது என்பதை காட்டுகிற போதும், முக்கிய சராசரிகளுக்கு (இ.எம்.ஏ.,) கீழே நிப்டி வர்த்தகமாகிக்கொண்டிருப்பதால், பியரிஷ்னெஸ் முழுமையாக நீங்கவில்லை என்று கருத வேண்டியுள்ளது. அதே நேரம் பியரிஷ் தன்மை சற்று பலவீனம் அடைந்து வருவதும் கண்கூடாக தெரிகிறது.

ஏற்றம் தொடர்ந்தால் 24,200 முதல் 24,500 வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது. ‘ஸ்டோக்காஸ்டிக்’ சற்று ‘ஓவர் பாட்’ ஆக தென்படுவதால், எந்த நேரத்திலும் சிறியதொரு இறக்கத்தை எதிர்பார்க்கலாம். இறக்கம் வந்தால் 23,850 மற்றும் 23,400ல் நல்லதொரு சப்போர்ட் கிடைக்க வாய்ப்புள்ளது. செய்திகள் பாதகமாக இருந்தால் இந்த டெக்னிக்கல் லெவல்களில் தற்காலிக மாற்றங்கள் உருவாக வாய்ப்புகள் உள்ளது.

ஆதரவு 23,850 23,775 23,675

தடுப்பு 24,135 24,225 24,300

நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.)

நிப்டி50 (எண்ணிக்கை)

விப்ரோ 204.60 1.73

எட்டர்னல் 240.48 2.59

ஹெச்.டி.எப்.சி., பேங்க் 810.10 12.40

கோல் இந்தியா 435.30 -18.80

டாடா ஸ்டீல் 206.85 1.65

நிப்டி மிட்கேப் 50 (எண்ணிக்கை)

எஸ் பேங்க் 19.11 0.18

சுஸ்லான் எனர்ஜி 45.59 1.36

அசோக் லேலண்ட் 177.99 7.61

என்.எம்.டி.சி., 85.06 0.62

ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க் 66.30 1.02

நிப்டி ஸ்மால்கேப் 50 (எண்ணிக்கை)

கொஹேன்ஸ் லைப் சயின்சஸ் 373.30 56.45

ஏஞ்சல் ஒன் 281.20 -0.60

என்.பி.சி.சி., 89.15 1.32

இந்திரபிரஸ்தா கேஸ் 161.60 6.50

ஐநாக்ஸ் விண்ட் 87.00 1.61

மற்ற சில பங்குகளின் விலை விவரம்

மிசஸ்.பெக்டார்ஸ் புட் 193.90 5.27

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் 442.30 2.55

பினோலெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 164.50 2.49

கரூர் வைஸ்யா பேங்க் 282.70 5.05

டாடா பவர் கம்பெனி 399.50 4.80

*****

Source link