கணிசமான ஏற்றத்துடன் ஆரம்பித்த நிப்டி, தொடர்ந்து ஏற்றம் கண்டு, நாளின் இறுதியில் 873 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் ‘நிப்டி இந்தியா எப்.பி.ஐ.,150’ குறியீடு, குறைந்த பட்சமாக 3.71 சதவீத ஏற்றத்துடனும்; ‘நிப்டி ஸ்மால்கேப் 50’ குறியீடு அதிகபட்சமாக 4.62 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் நிப்டி ஐ.டி., குறியீடு குறைந்தபட்சமாக 0.52 சதவீத ஏற்றத்துடனும், நிப்டி ரியால்ட்டி குறியீடு அதிகபட்சமாக 6.75 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன.
வர்த்தகம் நடந்த 3,369 பங்குகளில், 2,960 ஏற்றத்துடனும்; 341 இறக்கத்துடனும்; 68 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. நிப்டி கண்டுள்ள வேகமான ஏற்றம், டெக்னிக்கலாக குழப்பத்தை உருவாக்கியுள்ளது. நீண்ட கால அடிப்படையிலான டிரெண்ட் இன்னமும் சற்று பலவீனமாகவே உள்ளது. 14 மற்றும் 21 நாள் சராசரிகளுக்கு(இ.எம்.ஏ.,) மேல் ஒரே பாய்ச்சலில் சென்றுள்ள நிப்டி, 50 நாள் சராசரிக்கு (இ.எம்.ஏ.,) கீழே நிறைவடைந்துள்ளது. மொமென்டம் சீராக இருந்தாலும்கூட, கணிமான அளவில் திடீர் ஏற்றம் கண்டுள்ளதால் ஒரு சிறிய இறக்கமோ அல்லது கன்சாலிடேஷனோ நடப்பதற்கான வாய்ப்புள்ளது.
தற்போதைக்கு திடமானதொரு ரெசிஸ்டென்ஸ் 24,225-ல் இருக்கிறது. 24,225-க்கு மேலே சென்றால் 24,850-ஐ நோக்கிய பயணம் நடைபெற வாய்ப்புள்ளது. 24,225-ஐ தாண்ட முடியாவிட்டால், டெக்னிக்கலாக மீண்டும் கீழே 23,500 வரை சென்று திரும்பவும் வாய்ப்புள்ளது.
ஆதரவு 23,875 23,750 23,675
தடுப்பு 24,075 24,150 24,225
நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.)
நிப்டி50 (எண்ணிக்கை)
ஹெச்.டி.எப்.சி., பேங்க் 817.50 45.50
எட்டர்னல் 244.40 12.43
ஓ.என்.ஜி.சி., 285.85 -0.80
டாடா ஸ்டீல் 204.25 6.12
கோட்டக் மஹிந்திரா பேங்க் 379.50 16.55
நிப்டி மிட்கேப் 50 (எண்ணிக்கை)
எஸ் பேங்க் 19.09 0.96
அசோக் லேலண்ட் 172.30 19.37
சுஸ்லான் எனர்ஜி 44.33 2.78
ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க் 66.13 4.94
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் 364.95 33.55
நிப்டி ஸ்மால்கேப் 50 (எண்ணிக்கை)
பந்தன் பேங்க் 164.95 15.82
ஏஞ்சல் ஒன் 267.50 21.40
ஐநாக்ஸ் விண்ட் 86.86 5.83
என்.பி.சி.சி., இந்தியா 89.00 4.84
ஹிந்துஸ்தான் காப்பர் 527.45 23.05
மற்ற சில பங்குகளின் விலை விபரம்
அசோகா பில்டுகான் 122.45 9.99
பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் 265.96 12.37
சி.இ.எஸ்.சி., 156.10 2.77
சாம்வர்தனா மாதர்சன் இன்டர்நேஷனல் 118.10 9.66
ரயில்டெல் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா 285.85 17.00
