தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று அக்டோபர் 29 ஆம் தேதி 3 வது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டெண்டர் விவகாரங்களில் அந்த அந்த துறை அமைச்சர்களே பொறுப்பு எனவும், அதில் எந்த சிக்கல் மற்றும் குளறுபடி ஏற்பட கூடாது என முதல்வர் கறாராக கூறியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று அக்டோபர் 29 ஆம் தேதி 35 அமைச்சர்களுடன் 3 வது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், நிர்வாகம் மற்றும் கட்சிடை எதிர்கட்சிகளிம் விமர்சனத்தில் இருந்து பாதுகாக்க மிக முக்கியமான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றனர். அதாவது, டெண்டர் விவகாரங்களில் அந்த அந்த துறை அமைச்சர்களே பொறுப்பு எனவும், அதில் எந்த சிக்கல் மற்றும் குளறுபடி ஏற்பட கூடாது என முதல்வர் கறாராக கூறியுள்ளார்.
முதல்வர் என்ன சொன்னார்?
அனைத்து அமைச்சர்களும் தங்கள் துறைகளின் கீழ் வழங்கப்படும் ஒப்பந்தப் பணிகளை (Tenders) மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும் என முதலமைச்சர் விஜய் மிகவும் அழுத்தமாக அமைச்சர்களுக்கு அறிவுருத்தியுள்ளதாக கூறப்படுகிறாது..
திடீர் எச்சரிக்கையின் பின்னணி
கடந்த சில நாட்களாக டெண்டர் விவகாரங்களில் அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், TVK அரசு மீது எந்த கரும்புள்ளியும் விழக்கூடாது என்பதில் முதல்வர் விஜய் மிகவும் உறுதியாக உள்ளாராம். இதனால் டெண்டர் விவகாரத்தில் முதல்வர் தனி கவனம் குவிந்துள்ளதாக கூறப்படுகிறது.
வெளிப்படைத்தன்மையில் டெண்டர்கள்
தமிழ்நாடு அரசின் அனைத்து டெண்டர்களும் tntenders.gov.in மூலம் ஆன்லைனில் மட்டுமே நடக்க வேண்டும், எந்த தனிப்பட்ட தலையீடும் இருக்கக்கூடாது, விதிமுறைகளை மீறக்கூடாது என்பதை தான் முதல்வர் மறைமுகமாக வலியுறுத்தியுள்ளார்.
TVK ஆட்சியில் ஊழலுக்கு இடமில்லை, டெண்டரில் வெளிப்படைத்தன்மை தான் முக்கியம் என்பதை முதல்வரே நேரடியாக அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவே அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது. உங்கள் துறை டெண்டருக்கு நீங்களே முழு பொறுப்பு என்ற தொனியில் இந்த அறிவுரை அமைந்துள்ளதாகவும். எனவே இனி தமிழக அரசின் ஒவ்வொரு டெண்டரும் முதல்வரின் நேரடி கண்காணிப்பில் தான் நடக்கும் என்பதை இதன் மூலம் முதல்வர் தெரிவித்துள்ளார் எனவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றனர்.
அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட 4 முக்கிய முடிவுகள்
தொழில் தொடங்க அனுமதி சீராய்வு மனு தாக்கல் சமூக நீதி கணக்காய்வு ஆணையம் உருவாக்கம் தாழம்பூர் நில விவகாரம் குறித்து விசாரணை
Source link
