டென்னிஸ்: பைனலில் வைஷ்ணவி

பெங்களூரு: ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையர் பிரிவு பைனலுக்கு முன்னேறினார் இந்தியாவின் வைஷ்ணவி.

பெங்களூருவில் பெண்களுக்கான ‘ஐ.டி.எப்., 100’ டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் வைஷ்ணவி (690 வது இடம்), உலகத் தரவரிசையில் 126 வது இடத்திலுள்ள தாய்லாந்தின் லான்லனா தரருதீயை சந்தித்தார்.

முதல் செட்டை 6-3 என வென்ற வைஷ்ணவி, அடுத்த செட்டையும் 6-3 என எளிதாக வசப்படுத்தினார். ஒரு மணி நேரம், 7 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் வைஷ்ணவி அத்கர் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறினார். இதில் இன்று ஜெர்மனியின் ஹன்னேவை (124வது இடம்) சந்திக்க உள்ளார்.

சானியாவுக்குப் பின்

‘ஐ.டி.எப்., 100’ அந்தஸ்து பெற்ற தொடரில் சானியாவுக்குப் பின் (2009), பைனலுக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை என பெருமை பெற்றார் வைஷ்ணவி 21.

அன்கிதா ‘இரண்டு’

பெண்கள் இரட்டையர் பைனலில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, இந்தோனேஷியாவின் பிரிஸ்கா ஜோடி, ஜப்பானின் மட்சுடா, ஷிமிஜு ஜோடியை எதிர்கொண்டது. ஒரு மணி நேரம், 33 நிமிடம் நடந்த போராட்டத்தின் முடிவில் அன்கிதா ஜோடி 4-6, 6-3, 5-10 என்ற கணக்கில் தோல்வியடைந்து, இரண்டாவது இடம் பெற்றது.

Source link