டென்னிஸ்: வைஷ்ணவி 'சாம்பியன்'

கலபுராகி: கர்நாடகாவின் கலபுராகி நகரில் ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடந்தது. ஒற்றையர் பிரிவு பைனலில் இந்திய வீராங்கனைகள் வைஷ்ணவி (‘நம்பர்-468’), அன்கிதா ரெய்னா (‘நம்பர்-681’) பலப்பரீட்சை நடத்தினர்.

முதல் செட்டில் இருவரும் மாறி மாறி ‘கேம்களை’ வசப்படுத்த, 6-6 என ஆனது. இதையடுத்து நடந்த ‘டை பிரேக்கரில்’ வைஷ்ணவி ஆதிக்கம் செலுத்தினார். முதல் செட்டை 7-6 என கைப்பற்றினார்.

அடுத்து நடந்த இரண்டாவது செட்டிலும் 4-4 என இழுபறி நீடித்தது. பின் சுதாரித்த வைஷ்ணவி அடுத்த இரு ‘கேம்களை’ கைப்பற்றி, 6-4 என செட்டை வென்றார். இரண்டு மணி நேரம், 16 நிமிட ஆட்ட முடிவில் வைஷ்ணவி 7-6, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார். இவருக்கு ரூ. 4.5 லட்சம், அன்கிதாவுக்கு ரூ. 2.42 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.

Source link