நடிகர் தனுஷ் அரசியல் கட்சி தொடங்கும் வேலைகளில் மும்முரம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில் விரைவில் டெல்லி செல்லும் திட்டத்தை முன்னெடுத்திருக்கிறார். இந்த பயணத்தில் அரசியல் ரீதியாக முக்கிய தலைவர்கள் சிலரை சந்திக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் கட்சியை பதிவு செய்யும் நடவடிக்கைகளும் முடுக்கி விடப்படவுள்ளது.
சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு குடியரசு தலைவரிடம் தேசிய விருதை பெற்றுக் கொண்டு சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கினார் நடிகர் தனுஷ். அப்போது நீங்கள் அரசியலுக்கு வரப் போவதாக செய்திகள் வருகிறதே, இது உண்மையா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சிரித்துக் கொண்டே சென்று கொண்டார். அந்த சிரிப்பின் அர்த்தம் தற்போது அனைத்திந்திய தனுஷ் ரசிகர் மன்றத்தின் பெயரை தனுஷ் நற்பணி இயக்கம் என மாற்றியது, சிவப்பு வெள்ளை நிற பின்னணியில் வெள்ளை நிற உடையில் அரசியல் தலைவரை போல தலைக்கு மேல் கையெடுத்து கும்பிடும் லோகோ வெளியிடுவது ஆகியவற்றில் வந்து நிற்கிறது.
தனுஷ் நற்பணி இயக்கம் உருவாக்கம்
அடுத்து மக்கள் நலப் பணிகளை மிகவும் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும் என்று தனது நற்பணி இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு நடிகர் தனுஷ் அறிவுறுத்தியுள்ளார். முதல்கட்டமாக கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட 5 சட்டப்பேரவை தொகுதிகளில் தங்கள் நற்பணி இயக்கத்தின் அடித்தளத்தை வலுப்படுத்த முடிவு செய்துள்ளனர். புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, அமைப்பு ரீதியாக பொறுப்புகள் வழங்குவது, குறிப்பிட்ட இடைவெளியில் ஆலோசனை கூட்டங்கள் நடத்தி தங்களது செயல்பாடுகளை அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்வது என திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அரசியல் ரீதியிலான நகர்வுகள் என்ற வட்டத்திற்குள் வந்து நிற்கிறது.
தனுஷ் எடுக்கும் புது அவதாரம்…இது தான் ரியல் அதிரடி?
டெல்லி செல்லும் நடிகர் தனுஷ்
இந்நிலையில் தான் டெல்லி செல்லும் பயணம் தொடர்பான தகவல்கள் வெளியாகி தமிழக அரசியல் களத்தை பரபரப்பிற்கு ஆளாக்கியுள்ளது. இந்த பயணத்தில் தேசிய கட்சிகளின் மூத்த தலைவர்கள் சிலரை நேரில் சந்தித்து பேசவுள்ளார். அவர்கள் மூலம் தனது அரசியல் வருகையை உறுதி செய்து, கட்சியாக புதிய பரிமாணத்தை எட்டுவதற்கு நடிகர் தனுஷ் ஆலோசித்து வருகிறார். இவர் அரசியல் கட்சி தொடங்க மாட்டார் என்று சிலர் தொடர்ச்சியாக பேசி வருகின்றனர். புதிதாக கட்சி தொடங்குவோரின் கனவெல்லாம் தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது ஒன்றே குறிக்கோளாக இருக்கிறது.
விஜய், அண்ணாமலை வரிசையில் புதிய கட்சி
விஜய் வருகை நடிகர் விஜய் அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி தற்போது முதலமைச்சர் நாற்காலியை அலங்கரித்து கொண்டிருக்கிறார். கட்சி தொடங்கிய இரண்டு ஆண்டுகளில் ஆட்சியை பிடித்துள்ளார். அண்ணாமலை திட்டம் We the leaders அமைப்பின் மூலம் அண்ணாமலை தீவிர முன்னெடுப்புகளை கையில் எடுத்துள்ளார். இவரது இலக்கு வரும் 2031 தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஆகும். அதற்கு முன்பாக ஆழம் பார்த்துவிட உள்ளாட்சி தேர்தலை குறிவைத்திருக்கிறார். தனுஷ் வியூகம் அடுத்து நடிகர் தனுஷ் மீது கவனம் திரும்பியிருக்கிறது. தற்போது தானே சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. அடுத்த சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 5 ஆண்டுகள் இருக்கிறதே என்ற கேள்வி எழலாம். ஆனால் முன்கூட்டியே ஆழம் பார்த்து விடுவது நல்லது என்று அரசியல் விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். முதலில் உள்ளாட்சி தேர்தல், அதன்பிறகு சட்டப்பேரவை தேர்தல் என்ற கணக்குடன் இருப்பதாக தெரிகிறது.
தேர்தல் ஆணையத்தில் தனுஷ் கட்சி பதிவு
இதற்காக தனது கட்சியை இந்திய தேர்தல் ஆணையத்தில் விரைவாக பதிவு செய்ய வேண்டும் என்று நடிகர் தனுஷ் திட்டமிட்டுள்ளதாக கூறுகின்றனர். அதற்கான வழிமுறைகள் என்ன, கட்சியாக பரிணமிக்கும் போது அதன் கட்டமைப்பு எப்படி இருக்க வேண்டும், நிர்வாகிகளை எப்படி நியமிப்பது, ஆலோசனை கூட்டங்கள், அரசியல் ஆலோசகர்கள், தேர்தல் வியூக நிபுணர்கள் எனப் பல விஷயங்கள் குறித்து டெல்லியில் நடைபெறும் ஆலோசனையில் முடிவு செய்யப்படலாம் என்கின்றனர்.
திராவிட கட்சிகளின் மாடலில் தனுஷ் திட்டம்
கட்சி கட்டமைப்பை பொறுத்தவரை பாஜக, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளை போல் அல்லாமல், திமுக, அதிமுக போன்று மாநில கட்சிகளின் அடிப்படையில் வடிவமைத்தால் பெரிதாக எடுபடும் என்று ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எனவே இனிவரும் நாட்களில் நடிகர் தனுஷ் தரப்பில் இருந்து அதிரடியாக பல விஷயங்களை எதிர்பார்க்கலாம்.
Source link
