டெல்லியில் ராகுல், பிரியங்கா கைது.. ஜனநாயகத்தின் மீது தாக்குதல் – ஆதவ் அர்ஜூனா கடும் கண்டனம் – minister aadhav arjuna condemns rahul priyanka arrested delhi protest

நீட் தேர்வு முறைகேடு வினாத்தாள் கசிவு உள்ளிட்டவற்றிக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்த நிலையில், உடல்நிலை மோசமானதால் வலுக்காட்டாயமாக இழுத்து சென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் போராட்டம்

இதனைத் தொடர்ந்து டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்களுக்கும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் இந்த போராட்டத்தை முன்னெடுத்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்து சில தினங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்ற போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

Work ஆகுமா பொது வேட்பாளர் Concept? திமுக போடும் கணக்கு Discussed!

இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முதலாக வெடித்த நிலையில் போராட்டக்காரர்களை கலைவதற்காக காவல்துறையினர் கண்ணீர் புகை உண்டு வீசினர். இதில் பல காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த சம்பவத்திற்கு பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவர்களை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

இளைஞர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய ராகுல்

அதேபோல் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவும் மருத்துவமனைக்கு சென்று காயமடைந்த மாணவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமலை காரணமாக 2-வது நாளாக அவை ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிக்கள் பிரதமர் இல்லத்தை நோக்கி பேரணியாக சென்றனர்.

அதன் பிறகு பிரதமர் இல்லம் அருகே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் உருவாகியது. மேலும் நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர் போராட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் மத்திய அமைச்சர் ஜிலேந்திரசிங் அங்கு வந்து ராகுல் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் போராட்டத்தை கைவிடமாறு அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

ராகுலுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ஆதவ் அர்ஜூனா

இருப்பினும் ராகுல் காந்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் போராட்டத்தை கலைக்க காவல்துறையினர் ராகுல் காந்தியை குண்டு கட்டாக தூக்கிச் சென்று பேருந்தில் ஏற்ற அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ராகுல் காந்தி மூக்கில் காயம் ஏற்பட்டதன் காரணமாக ரத்தம் வடிந்ததால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்திற்கு அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆதவ் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: டெல்லியில் இளைஞர் போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கிய ராகுல், பிரியங்கா கைது ஜனநாயக உரிமை மீதான தாக்குதல்
மாணவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு மத்திய அரசு உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்
கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்
நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ஒவ்வொரு அடியையும் மிக உறுதியாக எடுத்து வைப்போம் என்று தெரிவித்துள்ளார்.

Source link