டெல்லியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத்| ஐபிஎல் 2026

கடினமான இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணிக்கு கே.எல். ராகுல் நிதானமாக நின்று ஆடினார். அவர் 52 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 92 ரன்கள் குவித்து அணியை வெற்றிக்கு மிக அருகில் கொண்டு சென்றார். பாதும் நிசங்கா 41 ரன்கள் எடுத்தார்.

ரஷித் கானின் அபாரமான பந்துவீச்சால் டெல்லி அணிக்குத் தொடர்ந்து விக்கெட் சரிவு ஏற்பட்டது. கடைசி ஓவரில் டெல்லியின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. பிரசித் கிருஷ்ணா வீசிய அந்த ஓவரின் கடைசி பந்தில் டெல்லி வீரர் குல்தீப் யாதவ் ரன் அவுட் ஆனதால், டெல்லி அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் இந்த சீசனில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணி தனது முதல் தோல்வியைச் சந்தித்துள்ளது. குஜராத் தரப்பில் 4 ஓவர்களில் வெறும் 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ரஷித் கான் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

Source link