டெல்லி அணிக்கு சோக செய்தி… மேலும் 3 போட்டிகளை தவறவிடும் மிட்செல் ஸ்டார்க்

ஐபிஎல் 2026 சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், தோள்பட்டை மற்றும் முழங்கை காயம் காரணமாக இன்னும் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

ஆஸ்திரேலிய கோடைக்காலப் போட்டிகளின் போது ஏற்பட்ட இந்தக் காயங்களுக்கு அவர் தற்போது தாயகத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். இதன்காரணமாக, அவர் ஏப்ரல் 20-ஆம் தேதி வரை டெல்லி அணியுடன் இணைய வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தற்போது அக்சர் படேல் தலைமையில் விளையாடி வரும் நிலையில், ஸ்டார்க்கிற்குப் பதிலாக லுங்கி என்கிடி பந்துவீச்சில் முக்கியப் பங்காற்றி வருகிறார். ஸ்டார்க் ஏப்ரல் 21-ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரானப் போட்டியின் போது களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஆரம்ப கட்டப் போட்டிகளில் விளையாட முடியாததற்காக அணி நிர்வாகத்திடமும் ரசிகர்களிடமும் அவர் மன்னிப்பு கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link