டெஸ்ட் தரவரிசை: தென் ஆப்பிரிக்கா வீரர் முதலிடம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. டெஸ்ட் கிரிக்கெட் பேட்டர்களின் தரவரிசையில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் நம்பர் ஒன் வீரராக வலம் வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் சதம் அடித்த தென்ஆப்பிரிக்க கேப்டன் பவுமா 6-ல் இருந்து 2-வது இடத்துக்கு வந்துள்ளார். அதே சமயம் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித் 3 இடங் கள் தளர்ந்து 5-வது இடத்துக்கு சென்றுள்ளார்.

மார்கோ யான்சென்

இதன் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் தென்ஆப்பிக்க வேகப்பந்து வீச்சாளர் மார்கோ யான்சென் 5 இடங்கள் முன்னேறி முதல்முறையாக நம்பர் ஒன் இடத்தை (876 புள்ளி) பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் கலக்கியதால் (6 விக்கெட் மற்றும் 85 ரன்) இந்த ஜாக்பாட் அடித்துள்ளது. 2024-ம் ஆண்டு நவம்பரில் ககிசோ ரபடா முதலிடத்தில் இருந்தார். அதன் பிறகு முதலிடத்தை பெற்ற முதல் தென்ஆப்பிரிக்க பவுலர் இவர் தான். யான்செனின் விசுவரூபத்தால், ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் 2-வது இடத்துக்கு (861) சரிந்தார். இந் திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மேலும் ஒரு இடம் இறங்கி 5-வது இடத்தில் உள்ளார்.

டெஸ்ட் ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையிலும் மார்கோ யான்சென் (451 புள்ளி) முதலிடத்தை எட்டியுள்ளார். இதன் மூலம் ஒரே நேரத்தில் இரு பிரிவுகளில் முதலிடம் என்ற அரிய சாதனையை படைத்துள்ளார். இந்த பிரிவில் 4 ஆண் டுக்கு மேலாக நம்பர் ஒன் இடத்தில் இருந்த இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா இப்போது 2-வது இடத்துக்கு (422 புள்ளி) தள்ளப்பட்டுள்ளார்.

Source link