டெஹ்ரான்:அமெரிக்கா 20 மணி நேரத்தில் சரணடையாவிட்டால், அதன் நட்பு நாடுகள் கற்காலத்துக்கு செல்லும் என்று ஈரான் அதிரடியாக எச்சரித்துள்ளது.
மேற்காசிய நாடான ஈரான் உடனான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா விதித்திருந்த கெடு நெருங்கிவிட்டது. ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பது உட்பட 15 அம்ச திட்டத்திற்கு ஈரான் ஒப்புக்கொள்ளாவிட்டால் கற்காலத்துக்கு செல்லும் அளவுக்கு மிகப்பெரிய அழிவை சந்திக்கும் என்று, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்து வந்தார்.
ஆனால் இந்த மிரட்டல்களுக்கு அஞ்சாத ஈரான், தற்போது டிரம்புக்கே பதில் கெடு விதித்துள்ளது. ஈரான் சபாநாயகரின் முக்கிய ஆலோசகரான மஹ்தி மொஹம்மதி, ‘டிரம்ப் ஈரானிடம் சரணடைய 20 மணி நேரம் அவகாசம் தருகிறோம். இல்லையெனில் அவரது நட்பு நாடுகள் கற்காலத்துக்கு அனுப்பப்படும். நாங்கள் ஒரு போதும் பின்வாங்க மாட்டோம்’ என, சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
