டெஹ்ரான்: இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஏவுகணையில், ‘இந்திய மக்களுக்கு நன்றி’ என ஈரான் எழுதி அனுப்பியது, உலகளவில் கவனம் ஈர்த்து வருகிறது.
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஒரு மாதமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில், ஈரானில் 1,000த்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதற்கு பதிலடியாக ஈரானும், இஸ்ரேல் மற்றும் மேற்காசியாவில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த போரை நிறுத்த வேண்டும் என, நம் நாடு உட்பட பல நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. போரில் பாதிக்கப்பட்ட ஈரான் மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளையும் நம் நாடு வழங்கி வருகிறது.
இதற்கு நன்றி செலுத்தும் விதமாக ஈரான் செய்திருக்கும் செயல், உலகளவில் கவனம் ஈர்த்துள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தளங்கள் மீது, சமீபத்தில் 83-வது தாக்குதலை ஈரான் நடத்தியது.
அதற்காக பயன்படுத்தப்பட்ட ஏவுகணை ஒன்றில், ‘இந்திய மக்களுக்கு நன்றி’ என, ஈரான் விமானப்படை வீரர்கள் எழுதிய புகைப்படம் வெளியாகி உள்ளது.
