டெஹ்ரான்: 'நீங்கள் மின்சார கட்டமைப்புகளை தாக்கினால் நாங்களும் அதே பாணியில் உங்களுடைய மின்சார கட்டமைப்புகளை

டெஹ்ரான்: ‘நீங்கள் மின்சார கட்டமைப்புகளை தாக்கினால் நாங்களும் அதே பாணியில் உங்களுடைய மின்சார கட்டமைப்புகளை தாக்குவோம்’ என அமெரிக்காவுக்கு ஈரான் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை பதில் எச்சரிக்கை விடுத்துள்ளது-.

ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் திறக்காவிட்டால் அதன் முக்கிய மின் உற்பத்தி மையங்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து, ஈரானின் ஐ.ஆர்.ஜி.சி., எனும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை வெளியிட்டுள்ள எச்சரிக்கை:

நீங்கள் எங்கள் மின்சார கட்டமைப்பை தாக்கினால், நாங்களும் உங்களுடைய மின்சார கட்டமைப்பை தாக்குவோம். மேலும், இஸ்ரேலின் எரிசக்தி மற்றும் தகவல் தொடர்பு உள்கட்டமைப்புகள், அமெரிக்க தளங்களை கொண்ட பிராந்திய நாடுகளின் மின்சார கட்டமைப்புகளும் இலக்க வைக்கப்படும்.

மின்சார வலையமைப்பின் மீதான தாக்குதல்கள், மருத்துவமனைகள், அவசரகால மையங்கள், குடிநீர் அமைப்புகள் மற்றும் கடல் நீரை குடிநீராக்கும் மையங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை பாதிக்கும். மின் கட்டமைப்புகள் மீதான இலக்கு மனிதாபிமானமற்ற செயல்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link