டெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களுக்கு, 18 கோடி ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வெளியான

டெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களுக்கு, 18 கோடி ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வெளியான செய்திகள் அடிப்படை ஆதாரமற்றவை என ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.

மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து, கடந்த 28ம் தேதி போரை துவக்கின. இதற்கு பதிலடியாக, ஈரானும் இஸ்ரேல் மற்றும் தன் அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. தன் எல்லையை ஒட்டியுள்ள ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஹார்முஸ் ஜலசந்தியை 48 மணி நேரத்துக்குள் மீண்டும் எண்ணெய் கப்பல் போக்குவரத்துக்கு திறக்கா விட்டால், ஈரானின் மின் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும்’ என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்தார். ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் சில கப்பல்களுக்கு, ரூ. 18 கோடி போக்குவரத்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது என ஈரானிய பார்லிமென்டின் தேசிய பாதுகாப்பு குழு உறுப்பினர் அலாதீன் புருஜெர்டி அறிவித்ததாக செய்திகள் வெளியாகின.

இந் நிலையில், இந்த செய்திகளை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுகுறித்து இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் வெளியிட்டுள்ள பதிவு;

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு ஈரான் ரூ.18 கோடி கட்டணத்தை பெற்றுக் கொள்வதாக கூறப்படும் கூற்றுகள் முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றவை. இதுதொடர்பாக வெளியிடப்பட்டு உள்ள அறிக்கைகள் அனைத்தும் அவரவரின் தனிப்பட்ட கருத்துகளையே பிரதிபலிக்கின்றன. எந்த வகையிலும் ஈரான் அரசின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை.

இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source link