‘ட்ரம்ப் விமான நிலையம்’ எனப் பெயர் மாற்றம்; அமெரிக்க அதிபரின் அடுத்த அதிரடி

அமெரிக்காவின் அதிபராகப் பொறுப்பு வகித்து வரும் டொனால்ட் ட்ரம்ப், தான் பொறுப்பேற்றது முதல் பல அதிரடி திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். இவர் தேர்தலில் வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக அதிபராகப் பொறுப்பேற்றது முதல் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறியவர்களை வெளியேற்றுதல், வெளிநாட்டினருக்கான விசாக்களில் மாற்றம் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளார். 

அந்த வகையில், சமீபத்தில் அவர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் உலக அளவில் பேசுபொருளாக மாறிவருகிறது. அந்த வகையில், அமெரிக்காவின் 250 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ட்ரம்ப் உருவம் பொரிக்கப்பட்ட தங்க நாணயம் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து, அமெரிக்க கரன்சியான டாலரில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்காவில் ஆளும் அதிபரின் கையெழுத்து கரன்சியில் இடம் பெற்றது, இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

இந்த வரிசையில், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ‘பாம் பீச்’ என்ற சர்வதேச விமான நிலையம்,  ஜனாதிபதி டொனால்டு ஜே. டிரம்ப் சர்வதேச விமான நிலையம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான மசோதாவிற்கு புளோரிடா கவர்னர் ரான் டிசேன்டிஸ் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வருகின்ற ஜூலை 1 முதல் இந்த பெயர்மாற்றம் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த விமான நிலைய பெயர்மாற்றத்திற்கு ட்ரம்ப்பின் மகன் எரிக் ட்ரம்ப் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இருந்த போதிலும், இந்த விமான நிலையைப் பெயர்மாற்றத்திற்கு நாங்கள் ஒப்புதல் அளிக்கவில்லை என்று மத்திய விமான போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Source link