தக் ஷினேஸ்வர் வெற்றி: டேவிஸ் கோப்பை டென்னிசில்

பெங்களூரு: டேவிஸ் கோப்பை டென்னிஸ் ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் இந்தியாவின் தக் ஷினேஸ்வர் வெற்றி பெற்றார்.

பெங்களூருவில், டேபிஸ் கோப்பை டென்னிஸ் தகுதிச் சுற்று (‘ரவுண்டு-1’) நடக்கிறது. இதில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் விளையாடுகின்றன. ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் இந்தியாவின் சுமித் நாகல், நெதர்லாந்தின் குய் டென் குடென் மோதினர். இதில் சுமித் நாகல் 0-6, 6-4, 3-6 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

ஒற்றையர் பிரிவு 2வது போட்டியில் இந்தியாவின் தக் ஷினேஸ்வர், நெதர்லாந்தின் ஜெஸ்பர் டி ஜாங் மோதினர். முதல் செட்டை 6-4 எனக் கைப்பற்றிய தக் ஷினேஸ்வர், 2வது செட்டை 7-5 என போராடி வென்றார். ஒரு மணி நேரம், 28 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய தக் ஷினேஸ்வர் 6-4, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

ஒற்றையர் பிரிவு போட்டிகளின் முடிவில், முதல் சுற்று 1-1 என சமநிலையில் உள்ளது.

Source link