தங்கத்தால் அமைக்கப்படும் சாலை: துபாயின் தங்க மாவட்டத்தின் மற்றொருமொரு பிரமாண்டமான சாதனை – road made of gold another grand achievement by dubai gold district

திரைப்படத்தில் நடிகர் வடிவேலு துபாய் க்கு வேலை சென்றுவிட்டு தனது ஊருக்கு திரும்பிய அவர், துபாய் ரோடு பாத்துருக்கியா, துபாய் ரோட உத்து பாத்தா முகம் தெரியும், அங்கியே சேவிங் செய்து, பவுடர் அடித்து பொட்டு வைக்கலாம், ஒரு பானை சோத்தை போட்டு சாப்பிடலாம் என நகைச்சுவையாக துபாய் ரோட் குறித்து பேசியிருப்பார். ஆனால் வடிவேல் சொல்வதை மிஞ்சும் அளவிற்கு உலகிலேயே முதல் முறையாக, 24 காரட் சுத்தமான தங்கத்தால் ஆன நடைபாதை, துபாயில் கட்டப்பட்டு வருகிறது.

குறைந்த விலையில் கிடைக்கும் தங்கம்

மேற்காசியாவில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாய், உலகின் வணிக மற்றும் சுற்றுலா தலைநகராக விளங்குகிறது. குறிப்பாக தங்க நகைகளின் கூடாரமாக துபாய் திகழ்கிறது. அங்கு தங்கம் மற்றும் நகைகள் வாங்குவதற்கு வரி கிடையாது. மேலும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு கடுமையான வரிகள் இல்லாததால், உலகின் பல நாடுகளை விட துபாயில் தங்கம் மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது.

தங்க மாவட்டம்

இதனால் சுற்றுலாப் பயணியர் மற்றும் முதலீட்டாளர்கள் தங்கம் வாங்குவதற்கு துபாயை தேடிச் செல்கின்றனர். துபாயின் இதற்காக துபாய் தெய்ரா பகுதியில் தங்க மாவட்டம், விற்பனை இந்தாண்டு ஜனவரியில் தொடங்கப்பட்டது. தங்கம், ஆபரணங்கள், மொத்த வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பான 1,000-த்திற்கும் மேற்பட்ட சில்லறை விற்பனையாளர்கள் இங்கு இடம்பெற்றுள்ளனர்.

பிரமாண்ட சாதனை

இந்த தங்க நகர அந்தஸ்தை மேலும் மெருகூட்டும் வகையிலும், சுற்றுலாப் பயணியரை கவரும் நோக்கிலும் தங்க மாவட்டம் பிரமாண்டமான சாதனை படைக்கத் தயாராகி வருகிறது. அதாவது அங்கு உலகின் மிக நீளமான, 24 காரட் தங்கத்திலான நடைபாதை விரைவில் திறக்கப்படவுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களுக்குள், இந்த நடைபாதை திறக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவில் தங்க சாலை

இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கும் தங்க நாற்கர திட்டத்தை அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த போது தொடங்கி வைத்தார். இந்தியாவின் நான்கு முக்கிய நகரங்களான சென்னை, டெல்லி, கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இதனால் இந்த திட்டத்திற்கு தங்க நாற்கர சாலை என பெயர் சூட்டப்பட்டது.

பரவிய வதந்தி

இந்த திட்டம் தொடங்கப்பட்ட காலத்தில் இந்திய மக்களிடம் பெரும் வதந்தி பரவியது. அந்த வதந்தி என்னவென்றால், அது இந்தியா முழுவதும் தங்கத்தால் சாலை அமைக்கப் போவதாகவும், அதனாலே அதற்கு தங்க நாற்கர சாலை அமைக்கப்படுவதாகவும் மக்களிடையே வதந்தி பரவியது.

உலகில் 5ஆவது நீளமான சாலை

5,846 கி.மீ. கொண்ட இந்த நாற்கர சாலை உலகிலேயே 5ஆவது மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை ஆகும்.

டெல்லி – கொல்கத்தா: 1,453 கி.மீட்டரும்,

டெல்லி – மும்பை: 1,419 கி.மீட்டரும்

மும்பை – சென்னை: 1,290 கி.மீட்டரும்

சென்னை – கொல்கத்தா: 1,684 கி.மீட்டரும்

இந்தியாவில் நீளமான தேசிய நெடுஞ்சாலை இதுவாகும்.

உலகிலேயே மிக உயரமான கட்டிடமாக

உலகிலேயே மிக உயரமான கட்டிடமாக இருக்கும் புர்ஜ் கலீபா, துபாயின் முக்கியமான அடையாளமாக இருக்கிறது. சுமார் 16 ஆண்டுகளுக்கு பிறகு, இன்னுமே உலகின் மிக உயரமான கட்டிடம் என்ற சாதனையை தனது வசம் வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link