தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,040 அதிகரிப்பு; வெள்ளியும் கிலோவுக்கு 15 ஆயிரம் உயர்வு

சென்னை: சென்னையில் இன்று(ஏப்ரல் 01) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 3,040 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 400 ரூபாய்க்கும், கிராமுக்கு 380 ரூபாய் உயர்ந்து கிராமுக்கு 14,050 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், கிராம், 13,770 ரூபாய்க்கும், சவரன், 1,10,160 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 255 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்று (மார்ச் 31) தங்கம் விலை கிராமுக்கு, 100 ரூபாய் குறைந்து, 13,670 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 800 ரூபாய் சரிவடைந்து, 1,09,360 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு ஐந்து ரூபாய் குறைந்து, 250 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 5,000 ரூபாய் குறைந்து, 2.50 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இந்நிலையில் இன்று (ஏப்ரல் 01) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 3,040 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 400 ரூபாய்க்கும், கிராமுக்கு 380 ரூபாய் உயர்ந்து கிராமுக்கு 14,050 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 265 ரூபாய்க்கும், கிலோவுக்கு 15 ஆயிரம் ரூபாய் உயர்ந்து 2 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Source link