தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,120 சரிவு; 2 நாட்களில் ரூ.3,680 குறைவு

சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 04) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 265 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 15,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச நிலவரங்களால், கடந்த பிப்ரவரியில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் ஏற்ற, இறக்க நிலை காணப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் நேற்று முன்தினம் (மார்ச் 02) ஆபரண தங்கம் கிராம், 15,660 ரூபாய்க்கும், சவரன், 1,25,280 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 315 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்றைய நிலவரம்

நேற்று (மார்ச் 03) காலை, தங்கம் விலை கிராமுக்கு, 10 ரூபாய் குறைந்து, 15,650 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 80 ரூபாய் சரிவடைந்து, 1,25,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று மாலை மீண்டும், தங்கம் விலை கிராமுக்கு, 185 ரூபாய் குறைந்து, 15,465 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,480 ரூபாய் சரிவடைந்து, 1,23,720 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.

இன்றைய நிலவரம்

இந்நிலையில் இன்று (மார்ச் 04) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 265 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 15,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப் படுகிறது. கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 3,680 ரூபாய் குறைந்துள்ளது.

வெள்ளியும் சரிவு

இன்று வெள்ளி விலையும் சரிவை சந்தித்துள்ளது. கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 295 ரூபாய்க்கும், கிலோவுக்கு 20 ஆயிரம் ரூபாய் சரிந்து ஒரு கிலோ 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Source link