பிஷ்கெக்: ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் சுஜீத் தங்கம் கைப்பற்றினார்.
கஜகஸ்தானில் ஆசிய ‘சீனியர்’ மல்யுத்த சாம்பியன்ஷிப் நடக்கிறது. ஆண்களுக்கான ‘பிரீஸ்டைல்’ பிரிவில் போட்டிகள் நடந்தன. 65 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்திய வீரர் சுஜீத், 7-2 என ஈரானின் அப்துல் மஜித்தை வீழ்த்தினார். அடுத்து நடந்த பைனலில் சுஜீத், உஸ்பெகிஸ்தானின் ஜலோலோவை 8-1 என வென்று, தங்கம் கைப்பற்றினார். சர்வதேச அரங்கில் சுஜீத் பெற்ற தொடர்ச்சியான 15வது வெற்றி இது.
61 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அமன் ஷெராவத், ஈரானின் அகமது மசூதை சந்தித்தார். இதில் அமன் 11-9 என போராடி வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறினார். 86 கிலோ பிரிவில் இந்தியாவின் முகுல் தாஹியா 12-6 என கஜகஸ்தானின் போலத்தை சாய்த்து, பைனலுக்குள் நுழைந்தார்.
