லிக்னானோ: இத்தாலியில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் உலக பாரா சாலஞ்சர் டேபிள் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் ‘சி 4-5’ பிரிவில் (‘வீல் சேர்’) இந்தியா சார்பில் பவினா படேல் 39 பங்கேற்றார்.
காலிறுதியில் 3-0 (11—8, 11-2, 11-6) என்ற நேர் செட்டில் தென் கொரியாவின் சங்யே மூனை வென்றார். அடுத்து நடந்த அரையிறுதியில் மற்றொரு தென் கொரிய வீராங்கனை யங் ஜங்கை சந்தித்தார். இதில் பவினா 3-1 என (8-11, 11-8, 11-4, 11-4) வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறினார். பைனலில் பவினா, துருக்கியின் ஐயர்ம் ஓலக்கை எதிர்கொண்டார். முதல் இரு செட்டை பவினா 11-2, 11-6 என எளிதாக வசப்படுத்தினார். மூன்றாவது செட் இழுபறியானது. இருப்பினும் பவினா 14-12 என போராடி வசப்படுத்தினார். முடிவில் பவினா, 3-0 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
