மி யூச்சுவல் பண்டு நிறுவனங்கள் தங்கம் மற்றும் வெள்ளியின் ‘என்.ஏ.வி.,’ மதிப்பை எப்படி கணக்கிட வேண்டும் என்பதில் ‘செபி’ புதிய விதியை கொண்டு வந்துள்ளது. இது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதுவரை ‘லண்டன் புல்லியன் மார்க்கெட் அசோசியேஷன்’ நிர்ணயிக்கும் சர்வதேச விலையை அடிப்படையாக கொண்டு, அதனுடன் இறக்குமதி வரி, போக்குவரத்து செலவு போன்றவைகளை சேர்த்து என்.ஏ.வி., கணக்கிடப்பட்டு வந்தது.
இனி, உள்நாட்டு நேரடி சந்தை விலையை மட்டுமே அடிப்படையாக கொண்டு என்.ஏ.வி., கணக்கிடப்படும். இந்திய சந்தை நிலவரத்தை அப்படியே பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காக இந்த மாற்றத்தை செபி மேற்கொண்டிருப்பதாக தெரிகிறது.
