தஞ்சாவூர்: கூட்டணி ஒப்பந்தத்தை எல்லோரும் பாராட்டும் வகையில் வெற்றிகரமாக முடித்துவிட்டு வந்துள்ளேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் அமைச்சர் மகேஷ் இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: நேற்றிரவு வரை கூட்டணி கட்சிகளோடு பேசி ஒப்பந்தத்தை முடித்து விட்டு வந்துள்ளேன். கூட்டணி ஒப்பந்தத்தை எல்லோரும் பாராட்டும் வகையில் வெற்றிகரமாக முடித்திருக்கிறோம்.
கூட்டணியை முடித்துவிட்டு காரில் ஏறும்போது நான் கையைக்காட்டி ஆக்சன் செய்தது திட்டமிட்டு செய்ததல்ல. அந்த ஆக்சன் சமூக வலைதளங்களில் வைரலாகி ஆல் பினிஷ் என்பது போல பரவிக் கொண்டிருக்கிறது. காண்பித்த சைகை எதார்த்தமானது. ஒப்பந்தம் செய்த மகிழ்ச்சியோடு தான் இந்த திருமணத்திற்கு வந்துள்ளேன்.
ராஜ்யசபா வேட்பாளராக நமது கட்சியில் 2 பேர், கூட்டணி கட்சியில் 2 பேர் என 4 பேர் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கின்றனர். வேட்புமனு தாக்கல் செய்ய இன்று தான் கடைசிநாள். இதனால் தான் வேகமாக வந்து திருமணத்தை முடித்துவிட்டு செல்ல இருக்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
